உடலுக்கு ஆரோக்கியமா இனிப்பு? சர்க்கரை Vs வெல்லம்: இரண்டில் எது சிறந்தது?
சர்க்கரைக்கு பதில் வெல்லத்தை வெறுமனே இனிப்புகளில் பயன்படுத்துவது ஆரோக்கியமான தேர்வாக இருக்காது - நிபுணர் கருத்து காலை காபி & டீ-யில் துவங்கி இரவு தூங்க செல்லும் முன் குடிக்கும் பால் வரை சர்க்கரையை நாம் அளவுக்கு அதிகமாகவே பயன்படுத்தி வருகிறோம். அதிலும் வெள்ளை வெளேரென்று இருக்கும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை தான் பலரது விருப்பமாக இருந்து வருகிறது. எனினும் தினசரி நாம் எடுத்து கொள்ளும் அதிக சர்க்கரை அல்லது வெள்ளை சர்க்கரை ஹை பிளட் பிரஷர், எடை அதிகரிப்பு, நீரிழிவு, கொழுப்பு கல்லீரல் மற்றும் இதய நோய்கள் போன்ற பல உடல்நலப் பிரச்சனைகளின் அபாயங்களை அதிகரிக்கிறது. எனவே சர்க்கரை அல்லது சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை சர்க்கரையை அதிகம் பயன்படுத்துவது பல்வேறு உடல்நல கோளாறுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சர்க்கரைக்கு பதில் வெல்லத்தை பயன்படுத்த பலரும் பரிந்துரைக்கிறார்கள். வெள்ளை சர்க்கரை என்பது பீட் அல்லது கரும்பு சர்க்கரையிலிருந்து தயாரிக்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையாகும். அதே நேரம் வெல்லம் சுத்திகரிக்கப்படாத கரும்பு சாற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது. பொதுவாக சர்க்கரை கடுமையான செயல்ம