ஒரு கேக் துண்டு 27,000 ரூபாய்.. 41 ஆண்டு பழைய கேக்கில் அப்படி என்ன இருக்கு? இதுதான் விவரம்!

 41 வருடங்கள் பாதுகாக்கப்பட்ட அந்த கேக் அதனுடைய ஒரிஜினல் பேக்கிங்கில் இருக்கிறது. டோரி மற்றும் ரீஸ் வலைத்தளம் அதில் தங்களது அரசு பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்து கைகளால் எழுதப்பட்ட ஒரு குறிப்பும் இருந்துள்ளது .


அரச குடும்பத்தினர் எப்படி வாழ்ந்திருக்கிறார்கள், அவர்களுடைய பழக்க வழக்கங்கள் என்ன என்பதை பற்றியெல்லாம் நம் நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாட்டில் வாழும் அரசர்கள் பற்றிய செய்திகள் அனைத்துமே விரும்பி படிப்போம். தற்போதுவரை அரச குடும்பத்தினர் என்ற வழக்கத்தை பின்பற்றி வரும் இங்கிலாந்து நாட்டைப் பற்றி வரும் செய்திகள் அனைத்துமே வைரலாக இருக்கும்.

சமீபத்தில் மறைந்த இங்கிலாந்து அரசி பற்றிய பலவிதமான செய்திகள் இணையம் முழுவதும் பகிரப்பட்டன. இங்கிலாந்து அரசர் சார்லஸ் மற்றும் மறைந்த இளவரசி டயானா அவர்கள் சம்பந்தப்பட்ட ஒரு பொருள் ஏலத்திற்கு வருகிறது! அரச குடும்பத்தினர் சார்ந்த, ஏலத்துக்கு வரும் அந்த ஒரு பொருள் என்ன என்பதைக் கேட்டால் அதிர்ச்சி அடைந்துவிடுவீர்கள்!

41 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1981 ஆம் ஆண்டு தற்போது இங்கிலாந்து நாட்டின் அரசராக இருக்கும் சார்லஸ் மற்றும் மறைந்த இளவரசி டயானாவின் திருமணம் மிக மிக விமரிசையாக நடைபெறுகிறது. 40 ஆண்டுகளுக்கு முன்பே 3000 விருந்தினர்களோடு இவர்களுடைய திருமணம் உலகையே திரும்பி திரும்பி பார்க்க வைக்கும் ஒரு பிரம்மாண்டமான திருமணம் ஆக இருந்தது.

வெளிநாட்டில் நடக்கும் திருமணங்களில் திருமண கேக்குக்கு தனி இடம் இருக்கிறது. 41 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இவர்களது திருமணத்தில் வழங்கப்பட்ட ஒரு கேஸ் லைஸ் தான் தற்பொழுது ஏலத்திற்கு வர இருக்கிறது. நம்ப முடிகிறதா? நேற்று வாங்கிய கெக்கே இன்று கெட்டுப்போயிடும் போது, 40 ஒரு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த திருமணத்தில் கிடைத்த ஒரு கேக் ஸ்லைஸ் இப்பொழுது ஏலத்திற்கு விடப்பட இருக்கிறது!

நியூயார்க் போஸ்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் அந்த கேக் துண்டு திருமணத்திற்கு வந்திருந்த நிஜெல் ரிக்கெட்ஸ் என்ற ஒரு விருந்தினருக்கு அளிக்கப்பட்டதாகும். நிஜெல் அந்த கேக்கை இவ்வளவு ஆண்டுகளாக பத்திரமாக பாதுகாத்து உள்ளார் என்பதே ஆச்சரியமளிக்க கூடியதாக இருக்கிறது. சமீபத்தில் நிஜெல் இறந்து போனார். அதைத் தொடர்ந்து, இங்கிலாந்தில் உள்ள டோரி மற்றும் ரீஸ் ஏல வீடு, அந்த கேக்கை தற்போது ஏலத்திற்கு விட போகிறார்கள் என்று அறிவித்திருக்கிறார்கள். தோராயமாக இந்திய ரூபாயில் கேக் ஸ்லைஸின் மதிப்பு 27,000 என்று கூறப்படுகிறது.

41 வருடங்கள் பாதுகாக்கப்பட்ட அந்த கேக் அதனுடைய ஒரிஜினல் பேக்கிங்கில் இருக்கிறது. டோரி மற்றும் ரீஸ் வலைத்தளம் அதில் தங்களது அரசு பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்து கைகளால் எழுதப்பட்ட ஒரு குறிப்பும் இருந்துள்ளது. “டயானாவிற்கும் எனக்கும் சொல்வதற்கு வார்த்தைகளே கிடையாது; நீங்கள் இவ்வளவு முக்கியமான ஒரு பொருளை கண்டுபிடிப்பதற்கு எத்தனையோ பிரச்சனைகளை சந்தித்திருப்பீர்கள். அதை நாங்கள் பொக்கிஷம் போல பாதுகாப்போம்” என்ற குறிப்பு அதில் இருக்கிறது.

மறைந்த இங்கிலாந்து அரசி எலிசபத் அவர்களுடைய விண்ட்ஸ்டர் மாளிகையில் இருந்து திருடப்பட்ட ஒரு டீ பேக், ebayல் இந்திய ரூபாய் மதிப்பில் 9.5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்ட செய்தியை அடுத்து, இந்த கேக் ஸ்லைஸ் ஏலம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.





Comments

Popular posts from this blog

டீ, காபியில் பட்டர் போட்டு குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

தலைகீழாய் தொங்கிய படி பியானோ வாசிக்கும் இளம்பெண்! மெய்சீர்க்க வைக்கும் காட்சி...

ருசியான நாவூறும் நண்டு குருமா செய்வது எப்படி? இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்....