டீ, காபியில் பட்டர் போட்டு குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?
பொதுவாக நம்மில் பலருக்கு அதிகாலை எடுத்தவுடன் டீ காபி குடிப்பது வழக்கம்.
இது உடலுக்கு தினமும் புத்துணர்ச்சியை வழங்குகின்றது.
இதனுடன் ஒரு ஸ்பூன் பட்டர் போட்டு சேர்த்து குடிப்பது இன்னும் உடலுக்கு பல அற்புத நன்மைகளை வழங்கும் என்று சொல்லப்படுகின்றது.
தற்போது அவை எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்.
* பட்டரில் உள்ள ஆரோக்கியமான கொழுப்பு உடலுக்குத் தேவையான எனர்ஜியைக் கொடுப்பதோடு மெட்டபாலிசத்தைத் தூண்டுகிறது. இதனால் உடல் எடை வேகமாகக் குறைய ஆரம்பிக்கும்.
* பட்டர் டீயில் அதிக அளவில் காஃபைன் நிறைந்திருக்கிறது. இது உடலுக்குத் தேவையான முழு எனர்ஜியையும் கொடுக்கிறது. அதனால் டீயுடன் பட்டர் சேர்த்து எடுத்துக் கொள்ளும்போது கூடுதலான உடலுக்குத் தேவையான எனர்ஜியைப் பெற முடியும்.
* மோசமான செரிமான மண்டலத்தையும் சரிசெய்து ஜீரண சக்தியை மேம்படுத்த உதவுகிறது.
* தினமும் குறைந்தது ஒரு கப் பட்டர் டீ குடிப்பதால் வாயுத்தொல்லை மற்றும் அசிடிட்டி ஆகியவை ஏற்படாமல் தவிர்க்க முடியும்.
* பட்டர் டீ குடிப்பதால் இதய ஆரோக்கியத்திற்கு எந்தவித கெடுதலும் ஏற்படாது. ஏனெனில் இதில் அதிகப்படியான லினோலிக் அமிலம் இருக்கிறது. இது கெட்ட கொலஸ்டிராலைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தன்மையை கொண்டிருக்கிறது.
* மலச்சிக்கல் அவதிப்படுபவர்கள் ஒவ்வொரு வேளை உணவின் போது ஆரோக்கியான கொழுப்பு உணவுகளைச் சேர்த்துக் கொள்வது நல்லது. அதனால் பட்டர் சேர்த்த டீ அல்லது காபியை குடிப்பது நல்லது.
* மதிய உணவுக்கும் முன்பாக எப்படியும் லேசாக பசி எடுக்கும். அப்போது பட்டர் டீ ஒரு கப் குடிப்பது நல்லது. பட்டர் டீ குடிப்பது பசியைக் கட்டுப்படுத்தவும் அதிக கலோரிகள் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கவும் உதவும்.
* பட்டரில் பால் சார்ந்த புரதங்கள் அதிகம். இது டீயுடன் சேரும்போது டீயில் உள்ள ஆன்டி - ஆக்சிடணட்டுகளை உடல் உறிஞ்சிக் கொள்ள உதவியாக இருக்கும்.
ALSO READ : காய்ச்சலை குணமாக்கும் கஷாயம் ....
Comments
Post a Comment