புளூடூத் மூடி.. திறக்க மொபைல் நம்பர் அவசியம்.. தீபாவளி சிறப்பு குளிர்பானத்தை அறிமுகப்படுத்திய கோகோ-கோலா!

 கோகோ கோலாவின் டிஜிட்டல் செயலாக்கம் மற்றும் தயாரிப்பு கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தை அறிவிக்கும் விதமாக இந்த லாக் செய்யப்பட்ட பாட்டில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய கோக் பாட்டில்களை கோகோ-கோலா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

உலகளவில் முன்னணி கோலா விற்பனை நிறுவனமான கோகோ-கோலா,  வர உள்ள தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் விதமாக தனது பாட்டிலில் அதிநவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது ப்ளூடூத் மூலமாக ஓபன் செய்யக்கூடிய மூடிகளை கொண்ட லிமிடெட் எடிஷன் கோக் பாட்டில்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

பண்டிகைக் கால ஸ்பெஷலாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சிறப்பு புளூடூத் கேப் கோக் பாட்டிலை, சாதாரணமாக ஓபனர் கொண்டு திறக்க முடியாது. பரிசைப் பெறுபவர் மற்றும் பரிசை வழங்குபவர் சந்திக்கும் போது மட்டுமே பாட்டிலை திறக்க முடியும். ஏனெனில் பாட்டிலை பரிசாக அனுப்பியவரின் மொபைல் போன் அருகில் இருந்தால் மட்டுமே பாட்டிலை திறக்க முடியும். சமூக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இத்தகைய திட்டத்தை கோகோ கோலா திட்டமிட்டுள்ளது.

கோக்கின் சமீபத்திய #MilkeHiManegiDiwali பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, இந்த தீபாவளியை மக்கள் நேரில் சந்தித்து கொண்டாடுவதை ஊக்குவிக்கும் வகையில், இந்த தனித்துவமான தொழில்நுட்பம் சார்ந்த தயாரிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு கோக் நிறுவனம் கொண்டு வந்துள்ள முதல் தயாரிப்பு இதுவே ஆகும்.

https://www.coke2home.com/coke-lock/ என்ற மைக்ரோ சைட் மூலம் உங்கள் மொபைல் ஃபோனைப் பயன்படுத்தி ப்ளூ டூத் பாட்டிலை இலவசமாக ஆர்டர் செய்யலாம். பரிசு பெறுபவரின் பெயர், முகவரி மற்றும் தீபாவளி வாழ்த்து செய்தியையும் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இது சம்பந்தப்பட்ட முகவரிக்கு டெலிவரி செய்யப்படும். ஆனால் இந்த பாட்டிலை திறக்க அனுப்பியவரும், அவரது செல்போனும் இருக்க வேண்டும். இதற்கு பண்டிகை காலத்தில் குடும்பம் அல்லது நண்பர்களுடன் ஒன்றாக கொண்டாடுவதை ஊக்குவிக்கும் பிரச்சாரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கோகோ-கோலா மார்க்கெட்டிக் இயக்குநர் கௌசிக் பிரசாத் கூறுகையில், “Coca-Cola எங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு இப்படியொரு தயாரிப்பை முதன் முதலாக வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். கோகோ கோலாவின் டிஜிட்டல் செயலாக்கம் மற்றும் தயாரிப்பு கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தை அறிவிக்கும் விதமாக இந்த லாக் செய்யப்பட்ட பாட்டில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சமூக தொடர்புகளை ஊக்குவிக்க இந்திய மக்கள் லாக் செய்யப்பட்ட கோக் பாட்டில்களை பகிர்ந்து கொள்வார்கள் என நம்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த புதுவித புளூடூத் லாக் கோக் பாட்டிலானது, தீபாவளி அழைப்பிதழ் போன்றது. இதனை நமக்கு அனுப்பும் நபரை நேரில் சந்திக்கும் போது தான் திறக்க முடியும் என்பதால் ஒன்று அவர்கள் நமது வீட்டிற்கோ அல்லது நாம் அவர்களது வீட்டிற்கோ சென்று பலகாரங்கள், பட்டாசுகள் உடன் கோக் பாட்டிலையும் வைத்து கொண்டாடலாம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா தொற்று காரணமாக பண்டிகை காலம் சூடுபிடிக்கவில்லை. எனவே தற்போது நண்பர்களையும், உறவுகளையும் ஒன்றாக இணைக்கவும், மக்களிடையே ஒற்றுமை உணர்வை தூண்டவும் கோகோ-கோலா இந்த புதுவிதமாக புளூடுத் கோக் பாட்டில்களை அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.




Comments

Popular posts from this blog

டீ, காபியில் பட்டர் போட்டு குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

தலைகீழாய் தொங்கிய படி பியானோ வாசிக்கும் இளம்பெண்! மெய்சீர்க்க வைக்கும் காட்சி...

ருசியான நாவூறும் நண்டு குருமா செய்வது எப்படி? இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்....