ஆரோக்கியத்திற்கு அருமருந்து துளசி! துளசியின் அபூர்வ மருத்துவ குணங்கள்.....

 Medicinal properties Of Basil: துளசியில் இயற்கையாகவே உள்ள மருத்துவ குணம், உடலில் உள்ள திசுக்களுக்கு தீவிர பாதிப்புகள் ஏற்படும்போது அதை சமாளிக்கும் ஆற்றலை அளிக்கிறது. உடலில் உள்ள செல்களுக்கு தீங்கு ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்கிறது


  • துளசி செடியில் உள்ள மருத்துவ குணங்கள்
  • துளசி நீரை நாள்தோறும் பருகி வந்தால் கிடைக்கும் பலன்
  • சளி, இருமல் போன்ற நோய்களுக்கு சிறந்தது துளசி

 துளசியில் இயற்கையாகவே உள்ள மருத்துவ குணம், உடலில் உள்ள திசுக்களுக்கு தீவிர பாதிப்புகள் ஏற்படும்போது அதை சமாளிக்கும் ஆற்றலை அளிக்கிறது. உடலில் உள்ள செல்களுக்கு தீங்கு ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்கிறது. துளசியில் விஷ்ணு பத்தினி மகாலட்சுமி வாசம் செய்வதாக நம்பிக்கை. துளசியை வீட்டில் வளர்த்தால் ஆரோக்கியம் மட்டுமல்ல, செல்வ வளமும் சேரும். துளசி நோய்களை குணப்படுத்தி ஆரோக்கியத்தை அதிகரிக்கும் அருமருந்தாக திகழ்கிறது. துளசியை உண்பதால் செரிமானத் திறன் மற்றும் நரம்பு மண்டலத்தை வலுப்படுகிறது. தலைவலியை போக்கும் துளசியின் பயன்பாடு ஆழ்ந்த உறக்கத்தையும் கொடுக்கும்.

துாக்கமில்லாமல் சிரம்பபடுபவர்களுக்கு அருமருந்தாக செயல்படுகிறது துளசி. துளசி சாப்பிட்டால் மன அழுத்தம் குறையும் பதற்றம் தணியும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. மனச்சோர்வை நீக்கி மகிழ்ச்சியை அளிக்கும் மூலிகை துளசி ஆகும்.

சர்க்கரை நோயாளியின் ரத்தத்தில் சர்க்கரை அளவு மெதுவாக பரவ உதவும் துளசியை நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினசரி பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் சர்க்கரை நோய் தீவிரமாகாமல் கட்டுக்குள் இருக்கும். 

துளசி உடலின் உள் உறுப்புகளுக்கு மட்டுமல்ல, சருமத்திற்கும் சிறந்த மருந்தாகும். தோலில் உள்ள அழுக்கு, அசுத்தங்கள், முகப்பரு ஆகியவற்றை நீக்கும் திறம் கொண்டது துளசி. மருத்துவ குணம் கொண்ட துளசியை உட்கொள்வதால், காய்ச்சல், தலைவலி, இருமல் ஆகியவையும் குணமாகும். துளசியை தொடர்ந்து உட்க்கொண்டு வந்தால் இதய பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகளும் குறைகிறது. 

மூலிகைகளின் ராணியான துளசி, அதன் மருத்துவ குணத்தால், ஆயுர்வேத மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. துளசியின் இலைகள் மட்டுமின்றி, அதன் பூக்களிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. பெரும்பாலான தென்னிந்திய வீடுகளில் துளசி கட்டாயம் வளர்க்கப்படும் செடிகளுள் ஒன்று.

உங்கள் வீட்டிலும் துளசி செடி இருந்தால், உங்களுக்கு ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வீட்டிலேயே தீர்வு காணலாம். நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி என்றேல்லாம் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இந்த துளசி வகைகள் அனைத்துமே மருத்துவ குணம் வாய்ந்தது ஆகும்.

நாள்தோறும் துளசியின் சாற்றை பருகு வருவதால் குடல் புண், வாய் புண் உள்ளிட்டவை வராமல் தடுக்கும். வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் தண்ணீரில் துளசியை போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரைக் குடித்தால் வாய் மணக்கும். உடல் உறுப்புகள் சீராக இயங்குவதற்கு துளசி மிகவும் நல்லது.

நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி கொண்டது துளசி ஆகும். ஆன்மீகத்திலும் துளசிக்கு தனி இடம் உண்டு. கிரகணம் ஏற்படும் காலங்களில், தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்களில் துளசி மற்றும் தர்ப்பையை போட்டு வைத்தால், உணவுகள் பரிசுத்தமாக இருக்கும் என்பது தொன்று தொட்டு இருந்து வரும் நம்பிக்கை ஆகும்.


ALSO READ : Skin Care Tips: முகம் அதிக பொலிவு பெற பெரிய ஏலக்காய்... எப்படி பயன்படுத்துவது....



Comments

Popular posts from this blog

டீ, காபியில் பட்டர் போட்டு குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

தலைகீழாய் தொங்கிய படி பியானோ வாசிக்கும் இளம்பெண்! மெய்சீர்க்க வைக்கும் காட்சி...

ருசியான நாவூறும் நண்டு குருமா செய்வது எப்படி? இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்....