புரோட்டீன் சத்துக்களை அள்ளித்தரும் பருப்பு உருண்டை குழம்பு! செய்வது எப்படி?

 மதிய உணவுக்கு எப்போதுமே சாம்பார், புளிக்குழம்பு என சாப்பிட்டு போராடித்து விட்டதா?

இதோ உங்களுக்கான அட்டகாசமான சுவையில் பருப்பு உருண்டை குழம்பு செய்வது எப்படி என பார்க்கலாம்.


தேவையான பொருட்கள்

உருண்டைக்கு

கடலைப்பருப்பு– 1/4 கப்

துவரம் பருப்பு – 3/4 கப்

காய்ந்த மிளகாய் – 4

சோம்பு – அரை தேக்கரண்டி

பெரிய வெங்காயம் – 2(பொடியாக நறுக்கியது)

கருவேப்பிலை – சிறிதளவு


குழம்பு செய்வதற்கு

நல்லெண்ணெய் – 3 தேக்கரண்டி

சின்ன வெங்காயம்- 10 முதல் 15

பூண்டு- 8 முதல் 10 பல்

தக்காளி- 2

புளி- தேவையான அளவு 

மஞ்சள் தூள்- சிறிதளவு

குழம்பு தூள்- 1 முதல் 2 தேக்கரண்டி

வெந்தயம் – அரை தேக்கரண்டி

கடுகு – அரை தேக்கரண்டி

கருவேப்பிலை – சிறிதளவு


செய்முறை

முதலில் கடலை பருப்பு, துவரம் பருப்பை சுமார் 1 மணிநேரம் ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும், இதனை மிக்ஸி ஜாரில் போட்டு காய்ந்த மிளகாய், சோம்பு சேர்த்து சிறிது கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

இதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயம், கருவேப்பிலை, கொத்தமல்லி தழை, உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொண்டு சிறிய உருண்டைகளாக பிடிக்கவும்.

இதனை அப்படியே பொரித்து எடுத்தும் பயன்படுத்தலாம் அல்லது இட்லி பாத்திரத்தில் வேகவைத்தும் கொள்ளலாம்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம் போட்டு தாளித்த பின்னர், கருவேப்பிலை சேர்த்து அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.

பொன்னிறமாக வந்த பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும், தக்காளி வதங்கியதும் கரைத்து வைத்துள்ள புளி சேர்த்து மஞ்சள் தூள், குழம்பு தூள் சேர்க்கவும்.

நன்றாக கொதி வந்ததும் உருண்டைகளை போட்டு சிறிது நேரம் வேக விடவும், கடைசியாக அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கொத்தமல்லி தழை போட்டு இறக்கினால் சுவையான பருப்பு உருண்டை குழம்பு தயாராகிவிடும்.



ALSO READ : 90'S கிட்ஸ்களின் பேவரைட் பொரி உருண்டை! வீட்டிலேயே செய்யலாம்....




Comments

Popular posts from this blog

டீ, காபியில் பட்டர் போட்டு குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

தலைகீழாய் தொங்கிய படி பியானோ வாசிக்கும் இளம்பெண்! மெய்சீர்க்க வைக்கும் காட்சி...

ருசியான நாவூறும் நண்டு குருமா செய்வது எப்படி? இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்....