ருசியான நாவூறும் நண்டு குருமா செய்வது எப்படி? இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்....

 கடல் உணவுகளில் பலருக்கு பிடித்த சத்தான உணவு நண்டு. 

நண்டில், அத்தியாவசிய கொழுப்பு, ஊட்டச்சத்து மற்றும் கனிமங்கள் அதிக அளவில் உள்ளது. 

குறிப்பாக அடிக்கடி நண்டை உணவில் சேர்த்து கொண்டால் கண் பார்வை, இதயம் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலம் ஆகியவற்றின் ஆரோக்கியம் மேம்படும்.  

நண்டு வைட்டமின் ஏ சத்தின் ஆதாரமாக விளங்குகிறது. 

இதில் கலோரிகள் மிக மிகக் குறைவு. எனவே வாரத்தில் இரண்டு முறையாவது உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

நண்டை குருமா செய்து சாப்பிடுவது எப்படி என்று பார்க்கலாம்.


தேவையான பொருட்கள்

  1. நண்டு - 1 கிலோ 
  2.  வெங்காயம் - 2
  3.  தக்காளி - 1 
  4.  பச்சைமிளகாய் - 2 
  5.  தேங்காய் பால் - 2 டம்ளர் 
  6.  இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
  7.  கொத்தமல்லிதழை - சிறிதளவு
  8.  கறிவேப்பிலை - ஒரு கொத்து
  9.  மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் 
  10.  கரம் மசாலாத்தூள் - ½ டீஸ்பூன்
  11.  எண்ணெய் - 100 மிலி 
  12.  உப்பு - தேவையான அளவு

அரைக்க தேவையானவை

  1. தேங்காய் துருவல் - ஒரு கப் 
  2.  மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன் 
  3.  மிளகுத்தூள் - 1 டீஸ்பூன் 
  4.  மல்லித்தூள் - 3 டீஸ்பூன்
  5.  சீரகத்தூள் - 2 டீஸ்பூன் 
  6.  சோம்புத்தூள் - 1 டீஸ்பூன்
  7.  முந்திரி - 10
  8.  பாதாம் - 6
  9.  பூண்டு - 5 பல்

செய்முறை

 நண்டை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும்.

வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.

 அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும். அரைத்த மசாலாவை பாத்திரத்தில் எடுத்து தேங்காய் பாலுடன் மேலும் இரண்டு டம்ளர் தண்ணீர், சிறிதுளவு உப்பு சேர்த்து கரைத்து விட்டு கொத்தமல்லிதழையை சேர்த்து கொள்ளவும்.


ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி, அரை ஸ்பூன் உப்பும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். 

அனைத்தும் நன்கு வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். 

இப்போது கரைத்து வைத்திருக்கும் கலவையை ஊற்றி நண்டை சேர்த்து கொதிக்க விடவும். நன்றாக கொதித்து பச்சை வாசனை போனவுடன் கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால் சுவையான நண்டு குருமா ரெடி.



ALSO READ : உடலுக்கு வலிமை தரும் ஆட்டு குடல் சூப்....

Comments

Popular posts from this blog

டீ, காபியில் பட்டர் போட்டு குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

தலைகீழாய் தொங்கிய படி பியானோ வாசிக்கும் இளம்பெண்! மெய்சீர்க்க வைக்கும் காட்சி...