உலகம் முழுவதும் தீபாவளி கொண்டாடும் நாடுகள் ....
இந்தியாவைப் போல, இந்திய மக்கள் வாழும் பல நாடுகளில் தீபாவளி விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதில் குறிப்பிடத்தக்க நாடுகளைப் பற்றி பார்க்கலாம்.
* பிஜி தீவில் இந்தியர்கள் அதிக அளவில் உள்ளதால், அங்கு உற்சாகத்துடன், பட்டாசுகள் வெடித்தும், வீடுகளை அலங்கரித்தும், நண்பர்களுக்கு பரிசுப் பொருட்கள் அளித்தும் தீபாவளியை கொண்டாடுகிறார்கள்.
* இந்தோனேஷியாவில் தீபாவளியன்று இரவு நேரங்களில் விளக்குகள் ஏற்றியும், பட்டாசுகள், வாணவேடிக்கை வெடித்தும் மக்கள் கொண்டாடுகின்றனர்.
* மலேசியாவில் 'ஹரி தீபாவளி' என்ற பெயரில், சிறிது வித்தியாசமாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. இருப்பினும் மக்கள் காலையில் எண்ணெய் குளியலுடன் அந்த நாளை தொடங்குகிறார்கள். பல்வேறு கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. மலேசியாவில் பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை என்பதால், இனிப்புக்கள் மற்றும் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்கிறார்கள்.
* மொரீசியசில் வசிப்பவர்களில் 50 சதவீதம் பேர் இந்துக்கள் என்பதால், அங்கு தீபாவளி அதிக உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.
* நேபாளத்தில் தீபாவளி அதிக உற்சாகத்துடன் கொண்டாடப் படுகிறது. நேபாளத்தில் தசைன் பண்டிகைக்கு பிறகு மிகப் பெரிய அளவில் கொண்டாடப்படும் பண்டிகையாக தீபாவளி உள்ளது. லட்சுமி பூஜையும் நடத்தப்படுகிறது.
* இலங்கையில் தீபாவளிக்கென பிரத்யேக இனிப்பு வகைகள் அறிமுகப்படுத்தப்படும் என்பதை வைத்தே, அங்கு தீபாவளிக்கு முக்கியத்துவம் உள்ளது என்பதை உணர முடியும்.
* கனடாவில் அதிக அளவில் பஞ்சாப் மக்கள் வசிப்பதால், இங்கு 3-வது அதிகாரப்பூர்வமான மொழியாக பஞ்சாபி உள்ளது. இதனால் தீபாவளி ஆட்டம் பாட்டத்துடன் களைகட்டுகிறது.
* சிங்கப்பூரின் 'லிட்டில் இந்தியா' பகுதியில் ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே தீபாவளி கொண்டாட்டங்கள் தொடங்குவதால், அப்பகுதி வண்ண விளக்குகளால் பிரகாசிக்கிறது. தசராவும், அதனைத் தொடர்ந்து வரும் தீபாவளியும் அதிக மக்களால் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இப்பகுதியில் இந்தியாவைப் போன்று தீபாவளி பஜாரும் அமைக்கப்பட்டுள்ளது.
* இங்கிலாந்தில் பர்மிங்ஹாம் மற்றும் லிசெஸ்வர் பகுதியில் இந்தியர்கள் அதிகம் வசிப்பதால் பிரம்மாண்டமாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.
* டிரினிடாட் மற்றும் டொபாகோ தீவுகளில் தீபாவளியை மக்கள் இந்தியாவை போன்று கொண்டாடுகிறார்கள்.
* கரீபியன் தீவுகளில் ராமாயண காட்சிகள் காட்சிபடுத்தப்பட்டு, முக்கிய அம்சமாக தீபாவளி இருக்கிறது.
* நியூசிலாந்தின் ஆக்லாந்து, அமெரிக்காவின் சான் ஆன்டானியோ பகுதிகளிலும் ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே தீபாவளி பண்டிகையை மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனர்.
ALSO READ : HAPPY DEEPAVALI
Comments
Post a Comment