வாய்ப்புண்ணால் ரொம்ப அவஸ்தையா? இதனை தடுக்க சில பாட்டி வைத்தியம்! இதோ உங்களுக்காக.....
பொதுவாக நம்மில் பலருக்கு அடிக்கடி வாய்ப்புண் வருவதுண்டு. இது மிகவும் சாதாரண விஷயமாக இருந்தாலும், அதைக் கவனிக்காமல் விட்டாலோ, அடிக்கடி வந்தாலோ பிரச்சினை பெரிதாகிவிடும். தொடக்கத்தில் உதடு, கன்னம், நாக்கு, அண்ணம் ஆகிய பகுதிகளில் கடுகளவு தோன்றும் கொப்புளங்கள், சில நாட்களில் உடைந்து, குழிப்புண்களாக மாறி வலியை ஏற்படுத்தும். எனவே இவற்றை ஆரம்பத்திலே தடுப்பது நல்லது. இதற்கு சில எளிய வைத்தியங்கள் உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை இங்கே பார்ப்போம். * தேங்காய் பால் எடுத்து அதை வைத்து தினமும் 3-4 முறை வாய் கொப்புளிக்கவும். * ஒரு டம்ளர் குளிர்ந்த நீரும், ஒரு டம்ளர் சூடான தண்ணீரும் எடுத்து இரண்டையும் மாற்றி மாற்றி வாய் கொப்புளிக்கவும். இது மௌத் அல்சர்க்கு நல்ல தீர்வாக அமையும். * 2 கப் தண்ணீர் கொதிக்க வைத்து, அதில் 1 கப் வெந்தய கீரை சேர்த்து நீக்கி விடவும். இதை சிறிது நேரம் அப்படியே மூடி வைக்கவும். இந்த தண்ணீரை வடிகட்டி தினமும் இரண்டு அல்லது மூன்று முறை வாய் கொப்புளிக்கவும். * 1 கப் தண்ணீரில் 1 தேக்கரண்டி தனியா சேர்த்து கொதிக்கவிடவும். லேசாக சூடானதும் வடிகட்டி இதை வைத்து வாய் க...

Comments
Post a Comment