முகம் பளபளக்கும்.. முடி கருகருக்கும்.. கற்றாழையில் இருக்கு சூப்பரான பலன்கள்!
Aloe vera health Benefits: கற்றாழை ஜெல்களை வாரத்திற்கு ஒரு முறையாவது முடியில் அப்ளை செய்து வந்தால், முடியை வலுப்படுத்தி ஆலோ வேரா என்றழைக்கப்படும் கற்றாழை இன்றைக்கு மக்களிடம் மிகவும் பிரபலமாகியுள்ள ஒரு அற்புத மூலிகையாகும்.
உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உள்ள அனைத்து உறுப்புகளிலும் ஏற்படும் உடல் நலக்குறைபாடுகளைச் சரி செய்வதில் மிகப்பெரிய பங்காற்றுகிறது கற்றாழை.
குறிப்பாக ஒரு மனிதனுக்குத் தேவையான 22 அமினோ அமிலங்களில் 20 அமினோ அமிலங்கள் உள்ளதோடு வைட்டமின் ஏ, ஈ மற்றும் சி, கால்சியம், பொட்டாசியம், தாமிரம் செலினியம், குரோமியம் போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனால் தான் எந்தவித மருந்துகள் மற்றும் சருமத்தைப் பாதுகாப்பதற்கான பேஸ்வாஷ் மற்றும் லேசன்கள் தயாரித்தாலும் கற்றாழை நிச்சயம் இடம் பெற்றிருக்கும்.
மருத்துவக்குணங்கள் நிறைந்த கற்றாழையை முடி உதிர்வதைத் தடுப்பது முதல் சருமத்தை இளமையாக வைத்திருக்கவும் எவ்வித அச்சமும் இன்றி பயன்படுத்தலாம் என்கின்றனர் மருத்துவர்கள். எனவே கற்றாழை எந்தளவிற்கு மக்களின் சருமம் மற்றும் முடி பராமரிப்பிற்கு உதவுகிறது என்பது குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக் கொள்வோம்.
கற்றாழையின் மருத்துக்குணங்கள்..
கருவளையங்களுக்குத் தீர்வு:
இன்றைக்கு மணிக்கணக்கில் மொபைல் பயன்பாடு, தூக்கமில்லாமல் கணினியில் வேலை போன்ற பல காரணங்களுக்காக பெண்கள் முதல் ஆண்கள் வரை அனைவருக்கும் கருவளையங்கள் ஏற்படுவது இயல்பாகிவிட்டது. கண்களுக்குக் கீழே ஏற்படும் கருவளைங்களைச் சரிசெய்ய நினைப்பவர்கள் கற்றாழையைத் தான் முதலில் தேர்வு செய்ய வேண்டும் என்கின்றனர் அழகுக்கலை நிபுணர்கள். ஏனென்றால் இதில் வைட்டமின் ஏ மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்கள் அதிகளவில் உள்ளதால் கருவளையங்களை படிப்படியாக மங்கச் செய்கிறது.
கற்றாழையில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் உடலைக்குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் ஈரப்பதத்துடன் இருப்பதால் சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் வைத்திருக்க உதவுகிறது.
சரும பிரச்சனைக்குத் தீர்வு:
கற்றாழை ஒரு சிறந்த மாய்ஸ்சரைசராகப் பயன்படுகிறது. சருமத்திற்கு நீண்ட கால ஈரப்பதத்தை வழங்குவதோடு சருமத்தில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கரும்புள்ளிகளைத் தடுப்பதற்கு உதவியாக உள்ளது.
கற்றாழை ஜெல்களை வாரத்திற்கு ஒரு முறையாவது முடியில் அப்ளை செய்து வந்தால், முடியை வலுப்படுத்தி, முடி உதிர்வதைத் தடுக்கிறது மற்றும் சேதமடைந்த முடிகளையும் சரி செய்வதோடு தலை முடிக்கு நல்ல ஊட்டச்சத்தையும் நமக்கு அளிக்கிறது.
தோல் பிரச்சனைக்குத் தீர்வு:
சொரியாசிஸ் மற்றும் தோலில் ஏற்படும் அலற்சி போன்ற பிரச்சனைகளுக்கு கற்றாழை ஜெல் சிறந்ததாக அமைகிறது. டிரை ஸ்கின், ஆயில் ஸ்கின் போன்ற அனைத்து தோல் வகைகளுக்கு சிறந்த தேர்வாகவும் கற்றாழை அமைகிறது.
முகப்பரு பிரச்சனைக்குத் தீர்வு:
நம்மில் பலர் முகம் பளபளப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காக பல பேஸ் வாஷ்களை உபயோகிப்போம். சிலவற்றில் அதிக ரசாயணங்கள் கலந்திருப்பால் சரும துளைகளை அடைத்து பருக்கள் ஏற்படுவதற்கு ஒரு வழியாக அமையும். ஆனால் கற்றாழையில் அப்படி கிடையாது. இதில் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் அதிகளவில் உள்ளதால் சரும துவாரங்களை அடைக்க வாய்பில்லை மற்றும் முகப்பரு வருவதைத் தடுக்கிறது.
கற்றாழையில் உள்ள ஆன்டிமைக்ரோபியல் குணங்கள் அதிகளவில் உள்ளதால் பொடுகு பிரச்சனைக்கு தீர்வாக அமைகிறது.
கற்றாழை ஜெல்லை தொடர்ச்சியாக பல்வேறு பிரச்சனைகளுக்காகப் பயன்படுத்தும் போது, சருமத்தின் நெகிழ்ச்சித் தன்மையை மேம்படுத்தி முதுமை இன்றி இளமையானத் தோற்றத்தை அளிக்கிறது.
குளிர்காலத்தில் ஏற்படும் தோல் வெடிப்புகள் போன்றவற்றிற்கும் கற்றாழை சிறந்ததாக அமைகிறது. கற்றாழை ஜெல்லை அரைத்துப் பாதிக்கபட்ட இடத்தில் அப்ளை செய்யலாம். இதோடு மட்டுமின்றி வயிற்றுவலி, இரத்தப்போக்கு, ஈறுகளில் வீக்கம், உடல் உஷ்ணம் போன்ற பிரச்சனைக்குத் தீர்வாகவும் கற்றாழை அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ : உடலைக் குளிர்விக்கும் தென்னம்பூ லேகியம் ....
Comments
Post a Comment