Posts

வைட்டமின் சி குறைந்தால் ஆபத்து! உடனே விரட்டியடிக்க இந்த பழங்களே போதும்.. இனி தினமும் சாப்பிடுங்க....

Image
 அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் கட்டாயம் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். வைட்டமின் சி உணவுகள் ஒரு ஆன்டி ஆக்ஸிடன்ட்களாக செயல்படுகின்றன. நமது உடலில் உள்ள திசுக்களுக்கு இவை மிகவும் முக்கியமானது. இதய நோய்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், மகப்பேறு காலத்தில் ஏற்படும் பிரச்சினைகள், கண் நோய்கள், சரும சுருக்கங்கள் போன்றவை ஏற்படாமல் தடுக்க வைட்டமின் சி உதவுகின்றது. ஒரு வேளை நாம் வைட்டமின் சி உணவுகளை குறைவாக எடுத்து கொண்டால் பல்வேறு ஆபத்துகளை எதிர்கொள்ள நேரிடும். வைட்டமின் சி பற்றாக்குறையால் அதிக இரத்த அழுத்தம், பித்தப்பை பிரச்சினைகள், பக்கவாதம், சில வகை புற்றுநோய்கள், பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சினைகளும் நம் உடலில் ஏற்படுகின்றன. வைட்டமின் சி பற்றாக்குறையைத் தடுக்கும் 5 பழங்கள் கொய்யா  ஒரு கொய்யாப் பழத்தில் ஒரு நாளைக்கு தேவையான வைட்டமின் சி உள்ளது. எனவே தினமும் கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் உங்கள் வைட்டமின் சி பற்றாக்குறை பறந்து ஓடிவிடும். பப்பாளி பப்பாளியிலும் வைட்டமின் சி அதிக அளவில் இருக்கிறது. ஒரு கப் பப்பாளியில் ஒரு நாளைக்கு தேவையான வைட்டமின் சி சத்து உள்ளத...

முடி அடர்த்தியாக வளர வாரம் ஒருமுறை கருவேப்பிலை துவையல் சாப்பிடுங்க! செய்வது எளிது....

Image
 நாம் தினந்தோறும் சமையலுக்கு பயன்படுத்தும் முக்கிய பொருள் கருவேப்பிலை, மணத்திற்காகவும், உணவின் சுவைக்காகவும் பயன்படுத்தும் மருத்துவ மூலிகை என்றே குறிப்பிடலாம். இதில் கால்சியம், பாஸ்பரஸ், விட்டமின் ஏ, விட்டமின் பி, விட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. தினமும் காலை வெறும் வயிற்றில் 15 கருவேப்பிலை இலைகளை மென்று சாப்பிட்டு வந்தால், ஏராளமான நன்மைகளை பெறலாம். தொப்பை குறைவது, முடி வளர்ச்சியை அதிகரிப்பது, உடலில் இரும்புசத்தை அதிகரிப்பது என பல நன்மைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இந்த பதிவில் கருவேப்பிலை துவையல் செய்வது எப்படி என தெரிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள் கருவேப்பிலை– ஒரு கைப்பிடி வர மிளகாய்- 2 (காரத்திற்கு ஏற்ப) கடுகு, உளுத்தம் பருப்பு– ஒரு டேபிள் ஸ்பூன் சீரகம் – அரை டீஸ்பூன் மிளகு – 10 புளி – சிறு நெல்லிக்காய் அளவு தேங்காய்த் துருவல் – 2 டேபிள் ஸ்பூன் பெருங்காயத்தூள்- சிறிதளவு (தாளிக்க மட்டும்) உப்பு, எண்ணெய்- தேவையான அளவு செய்முறை முதலில் ஒரு கைப்பிடி கருவேப்பிலையை அலசி எடுத்துக் கொள்ளுங்கள், வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், மிளகை வ...

தமிழர்களின் உணவில் முக்கியமான கடுகு! சமையலுக்கு சேர்ப்பதற்கு காரணம் என்ன?

Image
 இந்திய உணவுகளில் முக்கிய இடம் பிடித்திருக்கும் கடுகு விதைகள் எண்ணற்ற வைட்டமின் மற்றும் தாதுக்களைக் கொண்டுள்ளது. இந்த கடுகு விதைகள் ஆரம்பத்தில் ஐரோப்பா பகுதியில் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது வட ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா நாடுகளில் பிரபலமாகியுள்ளது. பொதுவாக நாம் சமைக்கும் உணவிற்கு மேலும் சுவையூட்ட இந்த கடுகு விதைகளைக் கொண்டு தாளிப்பது உண்டு. கடுகு விதைகள் இரத்த சர்க்கரை அளவை குறைத்து, நோய் மற்றும் தொற்றில் இருந்து பாதுகாப்பு அளிக்க உதவுகிறது. கடுகில் இருக்கும் சத்துக்கள் கடுகில் கல்சியம், மாங்கனீஸ், தாமிரம், இரும்பு, செலினியம், துத்தநாகம், தாது உப்பு, வைட்டமின்கள், ஆக்சிடெண்டுகள், சல்பர், அப்லோ டாக்சின், சினிகிரின், மைரோசின், எருசிக், ஈகோசெனோக், ஆலிக், பால்மிடிக் சத்துக்கள் காணப்படுகின்றது. கடுகின் நன்மைகள்: தலைவலிக்கு நிவாரணம் சரும ஆரோக்கியம் செரிமான பிரச்சினையை தீர்க்கும் எலும்பு, பற்கள், ஈறுகளை வலுவாக்கும்  கடுகு எண்ணெய்யை எவ்வாறு பயன்படுத்தலாம்? பூஞ்சை தொற்று நோய்க்கு தீர்வு அளிப்பதுடன், ஜலதோசத்தை குணப்படுத்தவும், முடி வளர்ச்சியை அதிகரிக்கவும் செய்கின்றது. நோய் எ...

சிக்கல்களை விளைவிக்கும் `செல்போன் செயலிகள்'

Image
 செயலிகளின் மூலம் எண்ணற்ற நன்மைகள் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது. செல்போன் செயலிகளில் இருக்கும் சிக்கல்கள் என்னவென்பதை காண்போம். உள்ளங்கையில் உலகம்...  இது தான் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் சாதனை...  ஆம்! இன்று நம் கைகளில் தவழும் அறிவியலின் குழந்தையான செல்போன் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சம் என்றே சொல்லலாம்.  6-மாத குழந்தை முதல் 60-வயது முதியவர்கள் வரை சாதாரணமாக அனைவரது கைகளில் இருக்கும் செல்போனானது மனிதர்களின் வாழ்வை சிகரம் தொட வைத்ததோடு, சிந்திக்கும் அறிவாற்றலையும் பெருக செய்கிறது. ஒரே இடத்தில் இருந்து கொண்டு உலகில் உள்ள எந்தவொரு நபரிடமும் சில நொடிகளிலேயே தகவல்களை பரிமாறும் பரந்தவொரு சேவையை செல்போன்கள் அளித்து வருகின்றன.  தகவல்கள் மட்டுமின்றி வணிகம், சினிமா, விளையாட்டு, பொழுதுபோக்கு, பண பரிமாற்றம், அறிவியல் மற்றும் வரலாற்று தரவுகள் உள்ளிட்ட அனைத்து துறை செயல்பாடுகளையும் இணையம் மற்றும் செயலிகள் மூலம் அவை வழங்குகின்றன. 1ஜி, 2ஜி, 3ஜி, 4ஜி என்று இருந்த தொலைத் தொடர்பு சேவையின் 5-வது தலைமுறையான 5ஜி-யும் தற்போது வந்துவிட்டது.  4-தலைமுறைகளில் இல்லாத அளவில்,...

காலை நேர உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்வோமா..

Image
 உடற்பயிற்சி என்றாலே கடினமான பயிற்சிதான் பலன் தரும் என்று சிலர் கருதுகிறார்கள். ஒரு நாளைக்குக் குறைந்தது 10 முதல் 50 நிமிடங்கள் வரை உடற்பயிற்சியில் ஈடுபடலாம். சோம்பலை உதறி காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்தால் அது உடலிலும் மனதிலும் புரியும் மாயாஜாலங்கள் என்னென்ன தெரியுமா? மன அழுத்தத்தின் பிடியில் இருந்து விடுபட அதிகாலை உடற்பயிற்சியே அருமையான வழி.  காலைநேர உடற்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நடைப்பயிற்சி ஆகியவற்றால் மூளையில் உள்ள மகிழ்ச்சியைத் தூண்டும் ஹார்மோன்களான செரோடோனின், நோர்பினேப்ரைன், எண்டார்பின், டோபமைன் ஆகியவை அதி கரிக்கின்றன.  இதனால், நாள் முழுவதும் மனம் புத்துணர்ச்சி பெறுகிறது. முன்கோபம், படபடப்பு ஆகியவை கட்டுப்படுத்தப்படுகின்றன. உடற்பயிற்சி என்றாலே கடினமான பயிற்சிதான் பலன் தரும் என்று சிலர் கருதுகிறார்கள். கடினமான 'ஜிம்' பயிற்சிகள் செய்யத் தேவை இல்லை.  எளிதான 10 நிமிட 'வார்ம் அப்' பயிற்சி மூலமாகவே ரத்தத்தில் சர்க்கரை அளவு கணிசமாகக் குறையும். இதய ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் சீராகும். எனவே, ஒரு நாளைக்குக் குறைந்தது 10 முதல் 50 நிமிடங்கள் வரை உடற்பயிற்சியில் ஈ...

அரிசியில் மட்டுமல்ல சேமியாவிலும் புலாவ் செய்யலாம்...

Image
 குழந்தைகளுக்கு இந்த புலாவ் மிகவும் பிடிக்கும். இந்த ரெசிபி செய்ய 20 நிமிடங்களே போதுமானது. தேவையான பொருட்கள் :  சேமியா - 1 கப்  வெங்காயம் - 2  பச்சைமிளகாய் - 5  தக்காளி - 2  பீன்ஸ் - 50 கிராம்  கேரட் - 50 கிராம்  பச்சை பட்டாணி - 1/2 கப்  கொத்தமல்லி - சிறிதளவு,  இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்  மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்  தனியா தூள் - 1 டீஸ்பூன்  மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் தாளிக்க :   பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை - தேவையான அளவு  நெய், உப்பு - தேவையான அளவு செய்முறை :  வெறும் வாணலியில் சேமியாவை போட்டு பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.  வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய் மூன்றையும் பொடியாக நறுக்கி கொள்ளவும். கேரட்டை துருவிக்கொள்ளவும்.  கடாயில் சிறிது நெய் விட்டு சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின் பச்சை மிளகாய், வெங்காயத்தைப்போட்டு பொன்னிறமாக வதக்கவும்.  வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க...

சரும பிரச்சினைகளை தீர்க்கும் சூரிய குடிநீர்...

Image
 சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கவும் உதவும். சொறி, சிவத்தல் போன்ற சரும பிரச்சினைகளை குணப்படுத்தும். உடலுக்கு தேவையான வைட்டமின் டி அளவை பூர்த்தி செய்வதில் சூரிய ஒளிக்கு முக்கிய பங்களிப்பு இருக்கிறது. அதனால்தான் காலையில் சிறிது நேரமாவது சூரிய ஒளி உடலில் படும்படியான செயல்பாடுகளில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்படுகிறது.  வெளிநாடுகளில் சூரிய குளியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கடற்கரை மணலில் படுத்தபடி சூரிய ஒளி உடலில் படுமாறு தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்கிறார்கள். சூரிய குளியல் போலவே சூரிய ஒளி கதிர்கள் ஊடுருவும் நீரை பருகுவதும் பலன் தரும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.  சூரிய ஒளி படந்த நீரில் வைரஸ், பூஞ்சை மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை உடல்நலப் பிரச் சினைகள் மற்றும் சரும பிரச்சினைகளைத் தடுக்கக்கூடியவை. நாள் முழுவதும் உடலில் போதுமான ஆற்றல் இல்லாமல் இருப்பதாக உணர்ந்தால் சூரிய ஒளி ஊடுருவிய குடிநீரை பருகலாம் . இது சருமத்திற்கும் சிறந்தது. சொறி, சிவத்தல் போன்ற சரும பிரச்சினைகளை குணப்படுத்தும். சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கவும் உதவும் என்பது சரும நிபுணர்களின் கரு...

மின்னல் வேகத்தில் பாத்திரம் கழுவும் குரங்கு! ட்ரெண்டாகும் வீடியோ - இப்படியுமா?

Image
 குரங்கு வேக வேகமாக பாத்திரங்களை கழுவும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.  குரங்குகள் மிகவும் குறும்புத்தனமான விலங்குகள். என்ன தான் குறும்புகள் செய்தாலும், இவை புத்திசாலி மிருகங்களாக கருதப்படுகின்றன. வைரலாகும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகும் வீடியோவை பார்த்தால் நிச்சயம் இன்ப அதிர்ச்சி அடைவீர்கள். மனிதர்களையே மிஞ்சும் அளவுக்கு குரங்கு ஒன்று பாத்திரங்களை சுத்தம் செய்வதைக் காணலாம். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. ALSO READ :  புகை பிடிக்கும் பழக்கம் இருக்கா? இதை படித்தால் இன்றே விட்டுவிடுவீர்கள்!!

வாட்ஸ்அப் சாட்களை இரகசியமாக ஒளித்து வைக்க சூப்பரான ரிக்ஸ்! மாயமாக்கும் செயலி....

Image
 வாட்ஸ்அப் மெசேஜ்களை எமது கண்ணிற்கு மாத்திரம் தெரியும் படி மாற்றிக் கொள்ள புதிய அப்பேட் செய்யப்பட்டுள்ளது. சாட்களை மறைத்து வைக்க முடியுமா? அலுவலகத்தில் வேலை செய்யும் பயனர்கள் மற்றும் பொது இடங்களில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் பயனர்கள் போன்றவருக்கு இது உதவியாக இருக்கும். மேலும் வாட்ஸ்அப்புக்கும் உரிய அலைபேசிக்கும் சொந்தகாரர் மாத்திரமே இதை செயற்படுத்த முடியும். அந்தளவிற்கு பிரைவசி செட்டிங் செய்யப்பட்டுள்ளது. இதனை எப்படி ஆக்டிவ் செய்வது குறித்து சந்தேக இருக்கும்? இதற்கு வாட்ஸ்அப் சார்ந்த ஒரு ஆப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டுமா? இது போன்ற பல கேள்விகளுக்கு இங்கு பதிலை பெறலாம்.  செயலியின் செயற்பாடுகள் இந்த செயலி வாட்ஸ்அப்களிலிருக்கும் மெசேஜ்கள் மற்றும் சாட்களை "ப்ளர் (blur) " செய்துவிடுகிறது. உதாரணமாக, சாட்களிலிருக்கும் எழுத்துக்களை நாம் பார்க்க முடியாமல் மங்கலடைய வைக்கிறது. நாம் விரும்பும் சாட்களிலிருக்கும் உங்கள் கர்ஸரை (Cursor) வைத்தால் மாத்திரமே மெசேஜ் பார்க்க முடியும். உங்களுடைய கர்ஸரை மெசேஜ் மீது வைக்காத போது உங்களுடைய வாட்ஸ்அப் சாட் அனைத்தும் ப்ளர் நிலையில் இருக்கும். இந்த வசதி அலு...

முகத்தை பளிங்கு மாதிரி மாற்ற வேண்டுமா? கடல் உப்பை இப்படி பயன்படுத்தினாலே போதும்.....

Image
 பொதுவாக கடல் உப்பு உணவாகவும் மருந்துப் பொருளாகவும் அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுவதாகவும் என பல்வேறு பயன்களைக் கொண்டிருக்கின்றன. கடல் உப்பில் பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இது சருமத்தைப் பொலிவாக்கவும் இறந்த செல்களை நீக்க உதவுகின்றது. இதனை சரியான முறையில் பயன்படுத்துவது முகத்திற்கு நல்ல பயனை தருகின்றது. தற்போது இதனை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம்.  தேவையான பொருள்கள் கல் உப்பு - 2 ஸ்பூன் தேன் - 3 ஸ்பூன் பயன்படுத்தும் முறை கல் உப்பை நன்கு பொடி செய்து கொள்ளுங்கள். கடைகளில் வாங்கும் தூள் உப்பு பயன்படுத்த வேண்டாம். இந்த பொடி செய்த உப்புடன் தேனை கலந்து பேஸ்ட் போல மாற்றிக் கொள்ளுங்கள். முகத்தை நன்கு சுத்தமாகக் கழுவிவிட்டு இந்த பேஸ்ட்டை முகத்தில் அப்ளை செய்யுங்கள். 15 நிமிடங்கள் வரை அப்படியே உலர விட்டு விடுங்கள். நன்கு உலர்ந்ததும் ஒரு சிறிய காட்டன் டவலை வெந்நீரில் முக்கி எடுத்து நன்கு பிழிந்து கொள்ள வேண்டும். இந்த டவலை அப்படியே வெதுவெதுப்பாக முகத்தில் வைத்து ஒற்றி எடுக்க வேண்டும். பின்பு மெதுவாக ஸ்கிரப் செய்து கொள்ள வேண்டும்...

திராட்சை தண்ணீரில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் உள்ளதா? எப்படி எடுத்து கொள்ளலாம்?

Image
 உலர் பழங்களில் எப்போதுமே முதலிடத்தில் இருப்பது திராட்சை தான். அதில் உலர் திராட்சை பெரும்பாலாக கருப்பு, மஞ்சள் நிறங்களில் கிடைக்கிறது. இவற்றில் வைட்டமின் பி, சி, போலிக் அமிலம், இரும்புச் சத்து, பொட்டாசியம், கால்சியம் உள்ளிட்ட எண்ணற்ற சத்துகள் உள்ளன. இதன் நீரை ஊறவைத்து குடிப்பது இன்னும் பல பலன்களை அள்ளிதரும். அந்தவகையில் இந்த நீரை எப்படி குடிப்பது மற்றும் அதன் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.    எப்படி எடுத்து கொள்ளலாம்?   *  தினமும் 100-150 கிராம் திராட்சையை உட்கொள்வது எடுத்து கொள்வது நல்லது. * முதலில் இந்த திராட்சையை சுத்தமான தண்ணீரில் கழுவவும். பின்னர் அவற்றை தண்ணீரில் ஊற வைக்கவும். * அதிலும் திராட்சையை இரவு முழுவதும் ஊற வைக்கவும். பின்னர் இந்த தண்ணீரை காலையில் குடித்துவிட்டு, திராட்சையை மென்று சாப்பிட்டு வரவும். நன்மைகள் * திராட்சை தண்ணீர் குடித்து வந்தால் மலச்சிக்கல், அமிலத்தன்மை மற்றும் வாயு பிரச்சனைகள் நீங்கும். * தினமும் காலையில் வெறும் வயிற்றில் உலர் திராட்சை தண்ணீர் குடிப்பது உடல் எடையை கட்டுப்படுத்தும்.  * சுருக்கங்களை நீக்க திராட்சை நீர் பயன...

தொடையில் உள்ள கொழுப்பை குறைக்குமா? இந்த பயிற்சிகளை தவறாமல் செய்து வாங்க போதும்!

Image
 பொதுவாக நிறைய பேருக்கு தொடையில் கொழுப்பு சேர்ந்து காணப்படும். இதை சில வழிமுறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் சரி செய்ய முடியுமாம். அதற்கு சில உடற்பயிற்சிகள் உதவுகின்றது. தற்போது அதில் ஒன்றினை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்    ஸ்குவாடிங் (Squating) விரிப்பில் நேராக நிற்க வேண்டும். கைகளை முன்புறமாக நீட்ட வேண்டும். இப்போது, பாதி அமர்ந்த நிலையில் நிற்க வேண்டும். இதேநிலையில் 10 நொடிகள் இருக்கலாம். பின்பு, பழைய நிலைக்கு வந்து மீண்டும் இந்தப் பயிற்சியைச் செய்யலாம். இதேபோல் தொடர்ந்து 5 முறை செய்யலாம். பயிற்சியை வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று நாள் செய்யலாம். ஸ்குவாட்டிங் மற்றும் லஞ்சஸ் பயிற்சியையும் சேர்த்துச் செய்யலாம்.  பலன் இந்தப் பயிற்சியானது காலின் வடிவமைப்பை மேம்படுத்தும். உடல் சமநிலைத்தன்மை பெற உதவும். தொடையில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவும். கால் தசைகள் வலுப்பெறும். இதயத் துடிப்பைச் சீராக்க உதவும். உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. ALSO READ :  உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் மாரத்தான்... கடைப்பிடிக்க வேண்டியவை...

வாட்ஸ்அப்-இல் ஷாப்பிங் செய்யும் வசதி அறிமுகம்......

Image
 வாட்ஸ்அப் செயலியில் வியாபாரங்களை கண்டறிந்து நேரடியாக பொருட்களை வாங்கும் வசதி வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக இந்த வசதி தேர்வு செய்யப்பட்ட சில நாடுகளில் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. மெட்டா நிறுவனத்தின் குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப், தனது பிஸ்னஸ் ப்ரோஃபைல் பயனர்களுக்கு புது அம்சத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் தளத்தினுள் பிஸ்னஸ்களை தேடி, அவர்களிடம் சாட் செய்து பொருட்களை வாங்க முடியும்.  வாட்ஸ்அப் பிஸ்னஸ் பயனர்கள் பிஸ்னஸ்களை - வங்கி, பயணம் என குறிப்பிட்ட பிரிவுகளில் தேட முடியும். எனினும், முதற்கட்டமாக இந்த அம்சம் பிரேசில், கொலம்பியா, இந்தோனேசியா, மெக்சிகோ மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளில் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது.  இந்த அம்சம் பிஸ்னஸ் ப்ரோஃபைல் பயனர்கள் வியாபாரங்களை குறுந்தகவல் செயலிக்குள் எளிதில் கண்டறிய வழி செய்யும். இவ்வாறு செய்யும் போது காண்டாக்ட்களை சேவ் செய்ய வேண்டிய அவசியமோ, வியாபாரங்களின் விவரங்களை வலைதளங்களில் தேட வேண்டிய அவசியம் இல்லை.  வியாபாரங்களை தேடுவதோடு வாட்ஸ்அப் மூலம் நேரடியாக பொருட்களை வாங்கும் வசதியும் வழங்கப்படுகி...

உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் மாரத்தான்... கடைப்பிடிக்க வேண்டியவை...

Image
 உடற்பயிற்சியின் கால அளவு அதிகரிக்கும்போது உடலில் உள்ள கொழுப்பும் கரையத் தொடங்கும். நீண்ட தூர ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்பவர்களுக்கு ஊட்டச்சத்து மிக அவசியம். நீண்ட தூர ஓட்ட பந்தயமான மாரத்தான் முக்கிய நகரங்களில் அவ்வப்போது நடத்தப்படுகிறது. அதில் பங்கேற்க பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். மாரத்தானில் ஜெயிக்காவிட்டாலும் பந்தைய தூரத்தை முழுமையாக கடந்துவிட வேண்டும் என்ற எண்ணமும் நிறைய பேருக்கு இருக்கிறது. ஓட்டப்பயிற்சி உடல் நலத்திற்கு ஏற்றதாக கருதப்படுவதால் மாரத்தானில் கலந்துகொள்ள பலரும் விரும்புகிறார்கள். நீண்ட தூர ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்பவர்களுக்கு ஊட்டச்சத்து மிக அவசியம்.  சமச்சீரான சத்துணவுகளை அவர்கள் சாப்பிடாவிட்டால், உடலுக்கு போதுமான ஆற்றல் கிடைக்காது. காலப்போக்கில் உடல் சக்தியை இழந்து , 'ரெட்ஸ் சிண்ட்ரோம்' எனும் பாதிப்பை அடையும். அப்போது உடல் பலவீனமடைவது, பயிற்சி செய்யும் காலம் குறைவது, போதுமான உடல் ஆற்றல் இல்லாமல் போவது, தொடர்ச்சியாக காயங்கள் ஏற்படுவது, நோய் எதிர்ப்பு அமைப்பு பலவீனமடைவது போன்ற பிரச்சினைகள் உண்டாகும்.  எலும்பு அடர்த்திக்குறைபாடு, எலும்பு முறிவு ஏற்படுவதற...

பால் பவுடரில் சுவையான பர்ஃபி செய்யலாம் வாங்க.....

Image
 இந்த இனிப்பை 1 வாரம் வரை வைத்திருந்து சாப்பிடலாம். இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம். தேவையான பொருட்கள்   பால் பவுடர் - 2 கப்  பால் அரை கப்  பொடி செய்யப்பட்ட சர்க்கரை - அரை கப்  நெய் - விருப்பத்திற்கேற்ப  விருப்பமான நட்ஸ் -  விருப்பத்திற்கேற்ப குங்குமப்பூ - 4 சிட்டிகை செய்முறை  நட்ஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.  ஒரு நான்ஸ்டிக் வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும், பாலை ஊற்றவும்.  பின்னர் அதில் மெதுவாக பால் பவுடரையும் சேர்த்து கட்டி சேராதவாறு கைவிடாமல் கிளறி விட்டுக்கொண்டே இருக்கவும்.  இடையிடையே நெய்யை சேர்த்துக்கொண்டே வர வேண்டும். பின்பு பொடி செய்யப்பட்ட சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.  கலவையானது கெட்டியாக ஆரம்பித்து, ஓரங்களில் நெய் பிரிந்து வாணலியில் ஒட்டாமல் வர ஆரம்பிக்கும்.  அப்படி நன்கு கெட்டியாகி வரும் போது, சிறிது கலவையை எடுத்து உருட்டி பார்க்கவும்.  அவ்வாறு உருட்டும் போது, எளிதில் பந்து போலானால், சரியான பதத்தில் உள்ளது என்று அர்த்தம்.  இந்நிலையில் அடுப்பை அணைத்து விட வேண்டும். ...