திராட்சை தண்ணீரில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் உள்ளதா? எப்படி எடுத்து கொள்ளலாம்?
உலர் பழங்களில் எப்போதுமே முதலிடத்தில் இருப்பது திராட்சை தான்.
அதில் உலர் திராட்சை பெரும்பாலாக கருப்பு, மஞ்சள் நிறங்களில் கிடைக்கிறது.
இவற்றில் வைட்டமின் பி, சி, போலிக் அமிலம், இரும்புச் சத்து, பொட்டாசியம், கால்சியம் உள்ளிட்ட எண்ணற்ற சத்துகள் உள்ளன.
இதன் நீரை ஊறவைத்து குடிப்பது இன்னும் பல பலன்களை அள்ளிதரும்.
அந்தவகையில் இந்த நீரை எப்படி குடிப்பது மற்றும் அதன் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.
எப்படி எடுத்து கொள்ளலாம்?
* தினமும் 100-150 கிராம் திராட்சையை உட்கொள்வது எடுத்து கொள்வது நல்லது.
* முதலில் இந்த திராட்சையை சுத்தமான தண்ணீரில் கழுவவும். பின்னர் அவற்றை தண்ணீரில் ஊற வைக்கவும்.
* அதிலும் திராட்சையை இரவு முழுவதும் ஊற வைக்கவும். பின்னர் இந்த தண்ணீரை காலையில் குடித்துவிட்டு, திராட்சையை மென்று சாப்பிட்டு வரவும்.
நன்மைகள்
* திராட்சை தண்ணீர் குடித்து வந்தால் மலச்சிக்கல், அமிலத்தன்மை மற்றும் வாயு பிரச்சனைகள் நீங்கும்.
* தினமும் காலையில் வெறும் வயிற்றில் உலர் திராட்சை தண்ணீர் குடிப்பது உடல் எடையை கட்டுப்படுத்தும்.
* சுருக்கங்களை நீக்க திராட்சை நீர் பயனுள்ளதாக இருக்கும். இந்த தண்ணீரை குடிப்பதால் சருமம் அழகாக இருக்கும்.
ALSO READ : உங்களுக்கு தொண்டையில் சளி கட்டிக்கொண்டு பாடாய்படுத்துதா? இதனை நொடியில் போக்க சில டிப்ஸ் இதோ!
Comments
Post a Comment