வைட்டமின் சி குறைந்தால் ஆபத்து! உடனே விரட்டியடிக்க இந்த பழங்களே போதும்.. இனி தினமும் சாப்பிடுங்க....

 அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் கட்டாயம் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.

வைட்டமின் சி உணவுகள் ஒரு ஆன்டி ஆக்ஸிடன்ட்களாக செயல்படுகின்றன.

நமது உடலில் உள்ள திசுக்களுக்கு இவை மிகவும் முக்கியமானது.

இதய நோய்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், மகப்பேறு காலத்தில் ஏற்படும் பிரச்சினைகள், கண் நோய்கள், சரும சுருக்கங்கள் போன்றவை ஏற்படாமல் தடுக்க வைட்டமின் சி உதவுகின்றது.

ஒரு வேளை நாம் வைட்டமின் சி உணவுகளை குறைவாக எடுத்து கொண்டால் பல்வேறு ஆபத்துகளை எதிர்கொள்ள நேரிடும்.

வைட்டமின் சி பற்றாக்குறையால் அதிக இரத்த அழுத்தம், பித்தப்பை பிரச்சினைகள், பக்கவாதம், சில வகை புற்றுநோய்கள், பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சினைகளும் நம் உடலில் ஏற்படுகின்றன.


வைட்டமின் சி பற்றாக்குறையைத் தடுக்கும் 5 பழங்கள்

கொய்யா 

ஒரு கொய்யாப் பழத்தில் ஒரு நாளைக்கு தேவையான வைட்டமின் சி உள்ளது. எனவே தினமும் கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் உங்கள் வைட்டமின் சி பற்றாக்குறை பறந்து ஓடிவிடும்.

பப்பாளி

பப்பாளியிலும் வைட்டமின் சி அதிக அளவில் இருக்கிறது. ஒரு கப் பப்பாளியில் ஒரு நாளைக்கு தேவையான வைட்டமின் சி சத்து உள்ளது. இதில் வைட்டமின் ஏ, போலேட், நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம் மற்றும் ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்றவைகளும் உள்ளன.

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரியில் வைட்டமின் சி மட்டும் இல்லை புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து போன்றவைகளும் உள்ளன. இதை நீங்கள் சாலட், ஸ்மூத்தி மற்றும் டெசர்ட் போன்ற உணவுகளில் சேர்த்து கொள்ளலாம்.


அன்னாசி பழம்

 அன்னாசி பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஏ, கால்சியம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து போன்றவைகளும் உள்ளன. இது வைட்டமின் சி குறைப்பாடுகளை தடுக்கும்.

மாம்பழம்

ஒரு கப் மாம்பழத்தில் 76% வைட்டமின் சி அடங்கியுள்ளது. அதுமட்டும் இன்றி, நார்ச்சத்து, தாதுக்கள், வைட்டமின்கள் போன்ற உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்து களும் இதில் உள்ளன. 






Comments

Popular posts from this blog

டீ, காபியில் பட்டர் போட்டு குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

தலைகீழாய் தொங்கிய படி பியானோ வாசிக்கும் இளம்பெண்! மெய்சீர்க்க வைக்கும் காட்சி...

ருசியான நாவூறும் நண்டு குருமா செய்வது எப்படி? இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்....