முகத்தை பளிங்கு மாதிரி மாற்ற வேண்டுமா? கடல் உப்பை இப்படி பயன்படுத்தினாலே போதும்.....

 பொதுவாக கடல் உப்பு உணவாகவும் மருந்துப் பொருளாகவும் அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுவதாகவும் என பல்வேறு பயன்களைக் கொண்டிருக்கின்றன.

கடல் உப்பில் பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இது சருமத்தைப் பொலிவாக்கவும் இறந்த செல்களை நீக்க உதவுகின்றது.

இதனை சரியான முறையில் பயன்படுத்துவது முகத்திற்கு நல்ல பயனை தருகின்றது. தற்போது இதனை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம். 


தேவையான பொருள்கள்

கல் உப்பு - 2 ஸ்பூன்
தேன் - 3 ஸ்பூன்

பயன்படுத்தும் முறை

கல் உப்பை நன்கு பொடி செய்து கொள்ளுங்கள். கடைகளில் வாங்கும் தூள் உப்பு பயன்படுத்த வேண்டாம்.

இந்த பொடி செய்த உப்புடன் தேனை கலந்து பேஸ்ட் போல மாற்றிக் கொள்ளுங்கள்.

முகத்தை நன்கு சுத்தமாகக் கழுவிவிட்டு இந்த பேஸ்ட்டை முகத்தில் அப்ளை செய்யுங்கள். 15 நிமிடங்கள் வரை அப்படியே உலர விட்டு விடுங்கள்.

நன்கு உலர்ந்ததும் ஒரு சிறிய காட்டன் டவலை வெந்நீரில் முக்கி எடுத்து நன்கு பிழிந்து கொள்ள வேண்டும்.

இந்த டவலை அப்படியே வெதுவெதுப்பாக முகத்தில் வைத்து ஒற்றி எடுக்க வேண்டும். பின்பு மெதுவாக ஸ்கிரப் செய்து கொள்ள வேண்டும். இதன் டவலை இரண்டு நிமிடங்கள் அப்படியே வைத்திருங்கள். பின்பு முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவிக் கொள்ளுங்கள்.   

பயன்

தேன், உப்பு இரண்டிலுமே ஆன்டி இன்பிளமேட்டரி பண்புகள் இருப்பதால் இவை சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் மாசுக்களை நீக்கி, சருமத்தை பொலிவடையச் செய்யும்.  




Comments

Popular posts from this blog

டீ, காபியில் பட்டர் போட்டு குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

தலைகீழாய் தொங்கிய படி பியானோ வாசிக்கும் இளம்பெண்! மெய்சீர்க்க வைக்கும் காட்சி...

ருசியான நாவூறும் நண்டு குருமா செய்வது எப்படி? இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்....