பால் பவுடரில் சுவையான பர்ஃபி செய்யலாம் வாங்க.....
இந்த இனிப்பை 1 வாரம் வரை வைத்திருந்து சாப்பிடலாம். இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம்.
தேவையான பொருட்கள்
பால் பவுடர் - 2 கப்
பால் அரை கப்
பொடி செய்யப்பட்ட சர்க்கரை - அரை கப்
நெய் - விருப்பத்திற்கேற்ப
விருப்பமான நட்ஸ் -
விருப்பத்திற்கேற்ப குங்குமப்பூ - 4 சிட்டிகை
செய்முறை
நட்ஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு நான்ஸ்டிக் வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும், பாலை ஊற்றவும்.
பின்னர் அதில் மெதுவாக பால் பவுடரையும் சேர்த்து கட்டி சேராதவாறு கைவிடாமல் கிளறி விட்டுக்கொண்டே இருக்கவும்.
இடையிடையே நெய்யை சேர்த்துக்கொண்டே வர வேண்டும். பின்பு பொடி செய்யப்பட்ட சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
கலவையானது கெட்டியாக ஆரம்பித்து, ஓரங்களில் நெய் பிரிந்து வாணலியில் ஒட்டாமல் வர ஆரம்பிக்கும்.
அப்படி நன்கு கெட்டியாகி வரும் போது, சிறிது கலவையை எடுத்து உருட்டி பார்க்கவும்.
அவ்வாறு உருட்டும் போது, எளிதில் பந்து போலானால், சரியான பதத்தில் உள்ளது என்று அர்த்தம்.
இந்நிலையில் அடுப்பை அணைத்து விட வேண்டும்.
பின் ஒரு அகலமான தட்டில் நெய் தடவி, அதில் இந்த கலவையை ஊற்றி பரப்பி விட்டு, அதன் மேல் குங்குமப்பூ மற்றும் நறுக்கிய நட்ஸ்களை தூவி, ஒரு நெய் தடவிய ஸ்பூன் கொண்டு லேசாக அழுத்தி விட்டு, 30 நிமிடம் அறை வெப்பநிலையில் அப்படியே வைக்க வேண்டும்.
இறுதியில் ஒரு கத்தியால் அதை சதுர துண்டுகளாக வெட்டினால், சுவையான பால் பவுடர் பர்ஃபி தயார்.
ALSO READ : இரும்பு சத்து நிறைந்த முருங்கை கீரை துவையல்
Comments
Post a Comment