பொம்மை வீடு கட்டி கொடுத்த தந்தை..குதுகலமாக விளையாடும் குழந்தையின் க்யூட் வீடியோ வைரல்....

 தந்தை ஒருவர் தனது குழந்தைக்கு லிஃப்ட் வைத்து பொம்மை வீடு ஒன்று கட்டிக்கொடுத்துள்ள அழகான வீடியோ ட்விட்டரில் தற்போது ட்ரென்டாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.


குழந்தைகளின் உலகமானது குழந்தைகளை மட்டுமல்லாது அவர்களை காண்போரையும் குதுகலத்தில் ஆழ்த்துபவை. குறிப்பாக, பெற்றோருடன் குழந்தைகள் கொஞ்சி விளையாடி மகிழும் காட்சிகள் அவரின் முகத்திலும் மகிழ்ச்சியை தாமாக கொண்டுவந்து சேர்க்கும். இது போன்ற குழந்தைகளின் க்யூட் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. அப்படிதான் தந்தை மற்றும் குழந்தையிடையேயான அழகான வீடியோ தற்போது ட்ரென்டாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

இந்த வீடியோவை டேனி டெரானே என்ற ட்விட்டர் யூசர் தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த காணொலியில், தந்தை ஒருவர் தனது குட்டி 2-3 வயது மதிக்கத்தக்க குட்டி குழந்தைக்கு மரத்தினால் ஆன விளையாட்டு வீடு ஒன்றை கட்டி தந்துள்ளார். இந்த வீட்டின் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால் குழந்தையின் குட்டி வீட்டுக்கு மரத்தினால் ஆன பொம்மை லிஃப்ட் ஒன்றையும் வைத்துள்ளார்.

வீடியோவில் வரும் அந்த குட்டி குழந்தை மெல்ல தள்ளாடி நடந்து சென்று மர லிப்டில் நின்று கொள்கிறது. தந்தை குழந்தையிடம் கைப்பிடியை கெட்டியாக பிடித்துக்கொள் என்று கூற குழந்தையும் சரி என்று நன்றாக பிடித்துக்கொள்கிறது. பின்னர், தந்தை கயிறு மூலம் இழுக்க அந்த லிஃப்ட் இழுக்க மெல்ல மேலே அந்த லிஃப்ட் போகிறது. மேலே போக போக குழந்தை குதுகலத்துடன் வாய்விட்டு சிரித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது.

பின்னர் லிஃப்டில் இருந்து இறங்கி தனது விளையாட்டு வீட்டிற்குள் ஜாலியாக சென்றுவிடுகிறது. பார்ப்போரை கவர்ந்து மகிழச் செய்யும் இந்த காணொலியை ட்விட்ரில் இதுவரை சுமார் 42 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 2.5 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். இந்த காட்சிகள் வாழ்வின் அழகை, அற்புதத்தை நமக்கு சொல்லி தருவாக பலர் கமெண்ட் செய்தும் வருகின்றனர்.


ALSO READ : நீண்ட நேரம் இயர் போன்களைப் பயன்படுத்துபவர்கள் இந்த பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும் : எச்சரிக்கும் மருத்துவர்கள்!

Comments

Popular posts from this blog

டீ, காபியில் பட்டர் போட்டு குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

தலைகீழாய் தொங்கிய படி பியானோ வாசிக்கும் இளம்பெண்! மெய்சீர்க்க வைக்கும் காட்சி...

ருசியான நாவூறும் நண்டு குருமா செய்வது எப்படி? இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்....