நீண்ட நேரம் இயர் போன்களைப் பயன்படுத்துபவர்கள் இந்த பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும் : எச்சரிக்கும் மருத்துவர்கள்!

 நீண்ட நேரத்திற்கு இயர்போன்களைப் பயன்படுத்தும் போது ஏற்படும் மற்றொரு முக்கியமான பக்க விளைவு மயக்கம். பொதுவாக அதிக சத்தத்துடன் நீங்கள் பாடல்கள் கேட்கும் போது காதுகளுக்கு அழுத்தம் அதிகமாகும். இதனால் சில சமயங்களில் உங்களுக்கு மயக்கம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.


இன்றைக்கு யாரைப் பார்த்தாலும் காதில் மற்றும் கழுத்தில் இயர்போன்களோடு தான் சுற்றித்திரிகின்றனர். பிடித்த பாடல்களைக் கேட்பது, கார் அல்லது டூவிலரில் சென்றாலும் இயர்போன்களின் உதவியுடன் எவ்வித இடையூறும் இல்லாமல் பேசுவது என பலவற்றிற்கு உங்களுடன் பயணிக்கும் நண்பர்களாகவே மாறிவிட்டது. ஆனால் நாம் இயர்போன்களைப் பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இல்லாவிடில் வாழ்நாள் முழுவதும் எதையும் கேட்க முடியாத அளவிற்கு காதில் பெரிய பிரச்சனைகளை உங்களுக்கு ஏற்படுத்தி விடும்.

ஆம் ஒரு நாள் முழுவதும் அல்லது நீண்ட நேரத்திற்கு அதிக சத்தத்துடன் இயர்போன்களை நீங்கள் பயன்படுத்தும் போது காது செவுல்களில் அதிக அதிர்வுகள் ஏற்படும். ஆரம்பத்தில் வலியை ஏற்படுத்தினாலும் நாளாக நாளாக காது கேளாமை, மயக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை உங்களுக்கு ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். எனவே அதிக நேரம் இயர்போன்களைப் பயன்படுத்தினால் என்ன பிரச்சனைகளெல்லாம் உங்களுக்கு ஏற்படும்?எப்படி தீர்வு காண்பது என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்..

இயர்போன்களை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்:

காது தொற்று:

இயர்போன்களை நேரடியாக நம்முடைய காதிற்குள் வைத்து = நீண்ட நேரம் உபயோகிக்கும் போது காற்று செல்வதைத் தடுக்கிறது. இதனால் காதிற்குள் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரித்து காதுகளில் நோய்த் தொற்றுகளின் அபாயத்தை அதிகரிக்கிறது. இந்நிலையில் நம்முடைய இயர்போன்களை மற்றவர்கள் பயன்படுத்தும் போது நமக்கு ஏற்பட்ட தொற்று மற்றவர்களுக்கும் பரவ வாய்ப்புள்ளது.


மயக்கம்:

நீண்ட நேரத்திற்கு இயர்போன்களைப் பயன்படுத்தும் போது ஏற்படும் மற்றொரு முக்கியமான பக்க விளைவு மயக்கம். பொதுவாக அதிக சத்தத்துடன் நீங்கள் பாடல்கள் கேட்கும் போது காதுகளுக்கு அழுத்தம் அதிகமாகும். இதனால் சில சமயங்களில் உங்களுக்கு மயக்கம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

காதில் அழுக்கு வெளியேறுவதைத் தடுப்பது:

காதில் அதிக நேரத்திற்கு இயர்போன்களை வைத்திருக்கும் போது உங்கள் காதில் உள்ள மெழுகு திரவம் போன்ற அழுக்கு இயற்கையாக வெளியேறுவதைத் தடுக்கிறது. அதிகப்படியான இயர் வாக்ஸ் சேரும் போது தலைச்சுற்றல், வலி, அரிப்பு, வெர்டிகோ மற்றும் டின்னிடல் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

ஹைபராகுசிஸ்:

நீண்ட நேரம் உரத்த சத்தத்துடன் இயர்போன்களை உபயோகிக்கும் போது, சுற்றுச்சூழலில் உள்ள சத்தத்தைக்கூட நம்மால் கேட்க முடியாது. இதோடு நீண்ட நேரம் இயர்போன்களை உபயோகிக்கும் போது காதில் மட்டுமில்லை தலையில் கூட வலியையும், அதிக சத்தம் கேட்பது போன்ற பாதிப்பையும் உங்களுக்கு ஏற்படுத்தும்.


இதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

இன்றைய காலக்கட்டத்தில் இயர்போன்களைப் பயன்படுத்துவதை முற்றிலும் நிறுத்துவது என்பது சாத்தியமில்லை. எனவே நீங்கள் ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரத்திற்கு மேல் பயன்படுத்தக்கூடாது. அல்லது ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒருமுறை இயர்போன்களை அகற்ற முயற்சி செய்ய வேண்டும். இதோடு ஒலி அளவை 70- 80 டெசிபல்கள் மேல் இருக்கக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக அதிக சத்தம் இல்லாமல் இருக்கும் இயர்போன்களை மட்டும் பயன்படுத்துவது நல்லது. இவ்வாறு மேற்கொண்டும் உங்களது காதுகளில் வலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.



Comments

Popular posts from this blog

டீ, காபியில் பட்டர் போட்டு குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

தலைகீழாய் தொங்கிய படி பியானோ வாசிக்கும் இளம்பெண்! மெய்சீர்க்க வைக்கும் காட்சி...

ருசியான நாவூறும் நண்டு குருமா செய்வது எப்படி? இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்....