ரவை இருந்தால் போதும் டின்னருக்கு மொறு மொறுனு அடை தயார்... ரெசிபி இதோ...
வீட்டில் எந்த பொருளுமே இல்லை ஆனாலும் ருசியாக இரவு உணவை செய்து அசத்திட வேண்டும் என நினைக்கிறீர்களா..? கவலைய விடுங்கள். இந்த ரவை அடை தோசை உங்களுக்கு கைக்கொடுக்கும்.
இரவு என்ன செய்வதென்று தெரியவில்லையா..? வீட்டில் எந்த பொருளுமே இல்லை ஆனாலும் ருசியாக இரவு உணவை செய்து அசத்திட வேண்டும் என நினைக்கிறீர்களா..? கவலைய விடுங்கள். இந்த ரவை அடை தோசை உங்களுக்கு கைக்கொடுக்கும். உங்களுக்கான ரெசிபி இதோ...
தேவையான பொருட்கள் :
ரவை - 1 கப்
அரிசி மாவு - 2 tbsp
தயிர் - 2 tbsp
உப்பு - தே.அ
சீரகம் - 1 tsp
வெங்காயம் - 1
கறிவேப்பிலை , கொத்தமல்லி - சிறிதளவு
பச்சை மிளகாய் - 2
கேரட் துருவல் - 1 கைப்பிடி
மஞ்சள் தூள் - 1/4 tsp
செய்முறை :
பாத்திரத்தில் ரவை , அரிசி மாவு, தயிர் மற்றும் உப்பு சேர்த்து கலந்துகொள்ளுங்கள்.
பின் கொஞ்சம் அடை பதத்திற்கு தண்ணீர் ஊற்றி கலந்துக்கொள்ளுங்கள்.
பின் சீரகம், வெங்காயம், கறிவேப்பிலை என மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து கலந்துகொள்ளுங்கள்.
மாவின் பதம் அடை மாவு பதத்திற்கு தண்ணீர் இருக்க வேண்டும். மாவு தயாரானதும் தோசை கல் வைது ஒரு கரண்டி மாவு எடுத்து கெட்டியான அடை போல் சுற்ற வேண்டும்.
இரண்டு புறங்களிலும் திருப்பி போட்டு மொறுவலாக வந்ததும் எடுத்துவிடுங்கள்.
அவ்வளவுதான் ரவை அடை தயார்.
Comments
Post a Comment