ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..? இனிமேல் பயப்படாமல் சாப்பிடுங்க..!

 ஐஸ்கிரீம் சாப்பிட்டால் சளி பிடித்துவிடும், ஐஸ்கிரீம் சாப்பிட்டால் காய்ச்சல் வரும் என்று சொல்லுவதெல்லாம் கிட்ட தட்ட கட்டுக்கதைதான். ஐஸ்கிரீம் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தை எந்த விதத்திலும் பாதிக்காது.


ஐஸ்கிரீம் பிடிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா? விதவிதமான சுவைகளில், வடிவங்களில் ஐஸ்கிரீம் சாப்பிடும் போது, உலகமே அழகாகத் தோன்றும், மகிழ்ச்சியாக உணர்வீர்கள்..ஆனால் அதே நேரத்தில், ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும், கொழுப்பு சேரும், கொஞ்சம் குற்ற உணர்ச்சியும் அதிகரிக்கும் என்று காரணத்தால் மகிழ்ச்சியாக ஐஸ்கிரீம் சாப்பிட முடியாமல் பலரும் தவிர்க்கிறார்கள். ஐஸ்கிரீம் பிரியர்களுக்கு இதோ நல்ல செய்தி! ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.


ஃபெர்டிலிட்டியை மேம்படுத்தும் : 
குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிடும் தம்பதிகள், தினசரி ஐஸ்கிரீம் சாப்பிட்டு வருவது உண்மையில் ஃபெர்ட்டிலிட்டியை மேம்படுத்தும். அதிக கொழுப்பு சத்து நிறைந்த பால் பொருட்களை சாப்பிடுவது ஃபெர்டிலிட்டி விகிதத்தை அதிகப்படுத்துகிறது என்று ஒரு ஆய்வு வெளியிட்டு இருக்கிறது. எனவே கொழுப்பு இல்லாத, ஸ்கிம்டு உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு, கொழுப்பு உணவுகளை சாப்பிடலாம்.

உண்மையில் எடை குறைக்க உதவும்  : 
ஐஸ்கிரீம் என்பது அதிக கலோரிகள் மற்றும் கொழுப்புகள் கொண்ட உணவு. எனவே இதை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்ற கருத்துக்கு மாற்றாக உண்மையில் ஐஸ்கிரீம் சாப்பிடும் பொழுது எடை குறையும்.ஐஸ்கிரீம் என்பது மிகவும் குளிர்ச்சியான உணவு. எனவே உங்கள் உடலில் இருக்கும் குளிர்ச்சியான டெம்பரேச்சரை மாற்றி, சாதாரண தட்ப வெப்ப நிலைக்கு கொண்டு வருவதற்கு உடல் கூடுதல் கலோரிகளை எரிக்கும். ஐஸ்க்ரீம் சாப்பிடுவது உண்மையில் எடை குறைய உதவும். ஆனால் தினசரி ஒரு பெரிய பவுல் நிறைய ஐஸ்கிரீம் சாப்பிட்டு எடை குறையவில்லையே என்று சிந்திக்கக்கூடாது. எதுவாக இருந்தாலும் ஓரளவுக்கு சாப்பிடுவது தான் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை மறக்காதீர்கள்.


மார்பகப் புற்றுநோய் ஆபத்தைக் குறைக்கும் : 
பெண்களின் உடலில் கால்சியம் சத்து குறைபாடு, மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கியமான காரணமாகக் கூறப்படுகிறது. கால்சியம் சத்து அதிகமாக இருக்கும் உணவுகளில் ஐஸ்கிரீமும் ஒன்று! எனவே கால்சியம் சத்து குறைபாடு மட்டுமல்லாமல். மார்பக புற்றுநோய் ஆபத்து வராமல் தடுப்பதற்கும் ஐஸ்கிரீம் உதவுகிறது.


நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் : 
ஒரு சில உணவுகளை சாப்பிடும் போது, நம்மை மகிழ்ச்சியாக உணர வைக்கும் சில ஹார்மோன்கள் சுரக்கும். இவை ஃபீல்-குட் ஹார்மோன்கள் என்று கூறப்படும். ஐஸ்கிரீம் சாப்பிடும் பொழுது செரடோனின் என்று நம்மை உற்சாகமாக வைத்திருக்கும் ஹார்மோன் சுரக்கிறது. இது மன அழுத்தத்தை உண்டாக்கும் கார்டிசால் என்ற ஹார்மோன் சுரப்பையும் கட்டுப்படுத்துகிறது. எனவே ஐஸ்கிரீம் சாப்பிடும் போதெல்லாம் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு இதுதான் காரணம்.


உடல் வலிமை மற்றும் நோய் 
எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் : 
ஐஸ்கிரீம் சாப்பிட்டால் சளி பிடித்துவிடும், ஐஸ்கிரீம் சாப்பிட்டால் காய்ச்சல் வரும் என்று சொல்லுவதெல்லாம் கிட்ட தட்ட கட்டுக்கதைதான். ஐஸ்கிரீம் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தை எந்த விதத்திலும் பாதிக்காது. ஐஸ்கிரீம் என்பது ஃபெர்மெண்ட் செய்யப்பட்ட உணவு. எனவே இது உங்கள் செரிமானத்திற்கு ஏற்றது. அதுமட்டும் இல்லாமல் குளிர்ச்சியான உணவை சாப்பிடும் பொழுது இயற்கையாகவே உடல் வலிமை பெறும் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.

வைட்டமின்கள் மற்றும் 
மினரல்கள் நிறைந்தவை :
ஐஸ்கிரீம் பாலில் இருந்து தான் தயார் செய்யப்படுகிறது. மேலும், பழங்கள், உலர் பழங்கள், கொட்டைகள் ஆகியவையும் சேர்க்கப்படுகிறது. இதில் வைட்டமின் டி, வைட்டமின் ஏ, பாஸ்பரஸ், ரிபோஃபிளோவின் ஆகியவை உள்ளன.







Comments

Popular posts from this blog

டீ, காபியில் பட்டர் போட்டு குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

தலைகீழாய் தொங்கிய படி பியானோ வாசிக்கும் இளம்பெண்! மெய்சீர்க்க வைக்கும் காட்சி...

ருசியான நாவூறும் நண்டு குருமா செய்வது எப்படி? இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்....