ருசிக்க ருசிக்க நெல்லிக்காய் துவையல் வேண்டுமா? இதை செய்து அசத்துங்க!

 பொதுவாக இட்லி,தோசை என்று எடுத்தாலே துவையல் வகைகளுக்கு பஞ்சம் இருக்காது .

ஒரே வகையான துவையல் வகைகளை செய்து கொடுத்தாலும் காலையில் வீட்டிலுள்ளவர்களுக்கு சாப்பாடு ருசிக்காது.

இதன்படி, நெல்லிக்காயை பயன்படுத்தி நெல்லிக்காய் துவையல் எவ்வாறு செய்வது குறித்து தெரிந்து கொள்வோம்.


தேவையான பொருட்கள்


முழு நெல்லிக்காய் – 5

காய்ந்த மிளகாய்- 3 

பச்சை மிளகாய் – 2

பெருங்காயத்தூள் – 2 சிட்டிகை

தேங்காய் துருவல் – சிறிதளவு

எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன் அல்லது புளி – சிறிதளவு

உப்பு – சுவைக்கு ஏற்ப




தயாரிப்பு முறை

முதலில் நெல்லிக்காய்களை எடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். அதன் பின்னர் அதிலிருந்து கொட்டைகளை நீக்கி காயை தனியாக வைக்க வேண்டும்.

வேறாக பிரித்தெடுத்த பின்னர் அத்துடன் காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், தேங்காய் துருவல், எலுமிச்சைச் சாறு அல்லது புளி சேர்த்து இவையனைத்தையும் மிக்ஸியில் போட்டு நைசாக அரைக்க வேண்டும்.

பின்பு தேவை என்றால் தாளித்து பயன்படுத்தலாம்... அவ்வாறு இல்லையெனில் அப்படியே எடுத்து பரிமாறலாம்.




Comments

Popular posts from this blog

டீ, காபியில் பட்டர் போட்டு குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

தலைகீழாய் தொங்கிய படி பியானோ வாசிக்கும் இளம்பெண்! மெய்சீர்க்க வைக்கும் காட்சி...

ருசியான நாவூறும் நண்டு குருமா செய்வது எப்படி? இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்....