வெண்டைக்காய் மோர் குழம்பு.....

 வெண்டைக்காய் சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும். வெண்டைக்காயின் வழவழப்புத் தன்மையில் அதிக மருத்துவ குணம் உள்ளது.


தேவையான பொருட்கள்

 வெண்டைக்காய் - 10 
தயிர் - 1 1/2 கப் 
சிவப்பு மிளகாய் - 4 
கடுகு - கால் தேக்கரண்டி 
சீரகம் - 1 தேக்கரண்டி 
பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
 கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

 மசாலா அரைக்க 

சிறிய வெங்காயம் - 2 
பச்சை மிளகாய் - 1 
பூண்டு - 2 பற்கள் 
தேங்காய் துருவியது - 2 மேசைக்கரண்டி
 மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி 
சீரகத்தூள் - அரை தேக்கரண்டி


செய்முறை 

வெண்டைக்காயை நன்றாக கழுவி துடைத்து விட்டு சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

 ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெண்டைக்காயை உப்பு சேர்த்து வறுக்கவும் மசாலா அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிச்சியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.

 ஒரு கிண்ணத்தில் புளித்த தயிருடன் அரைத்த மசாலா விழுதை சேர்த்து கலக்கவும் .

ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், சிவப்பு மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வறுத்த வெண்டைக்காய், தயிர் கலவை மற்றும் உப்பு சேர்த்து சிறிது கொதிக்க விடவும்.

 சுவையான வெண்டைக்காய் மோர் குழம்பு தயார்.




Comments

Popular posts from this blog

டீ, காபியில் பட்டர் போட்டு குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

தலைகீழாய் தொங்கிய படி பியானோ வாசிக்கும் இளம்பெண்! மெய்சீர்க்க வைக்கும் காட்சி...

ருசியான நாவூறும் நண்டு குருமா செய்வது எப்படி? இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்....