சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையான கறிவேப்பிலை பொடி .......

 கறிவேப்பிலையில் கால்சியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளது. உடலில் உள்ள கொட்ட கொழுப்பை கரைக்கும்.


தேவையான பொருட்கள் 

கறிவேப்பிலை - 2 கப், 
காய்ந்த மிளகாய் - 10,
 மிளகு - 1 டேபிள்ஸ்பூன்,
 சீரகம் - 1 டேபிள்ஸ்பூன், 
கடலைப் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், 
உளுத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், 
பெருங்காயம் - 1 டீஸ்பூன், 
உப்பு - தேவைக்கேற்ப, 
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை

 கறிவேப்பிலையை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

 கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் காய்ந்த மிளகாயை போட்டு வறுத்து கொள்ளவும். 

அடுத்து அதில் மிளகு, சீரகம், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு போட்டு சிவக்க வறுத்து கொள்ளவும்.

 கடைசியாக கறிவேப்பிலை சேர்த்து வறுத்து, ஆறிய பிறகு உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும். 

சூப்பரான சத்தான கறிவேப்பிலை பொடி ரெடி இந்தப் பொடியை சாதத்தில் சேர்த்து நெய்/எண்ணெய் கலந்து சாப்பிடலாம்.







Comments

Popular posts from this blog

டீ, காபியில் பட்டர் போட்டு குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

தலைகீழாய் தொங்கிய படி பியானோ வாசிக்கும் இளம்பெண்! மெய்சீர்க்க வைக்கும் காட்சி...

ருசியான நாவூறும் நண்டு குருமா செய்வது எப்படி? இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்....