WhatsApp Webல் இனிமேல் இந்த வசதி இல்லை!

 உலகளவில் பெரும்பாலான நபர்கள் பயன்படுத்தும் சமூகவலைத்தளங்களில் WhatsApp முக்கியமானது.

ஒவ்வொரு நாளும் பயனாளர்களுக்காக புது புது அப்டேட்களை வழங்கி வருகிறது WhatsApp.

View Once

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒருமுறை மட்டுமே பார்க்கக்கூடிய View Once என்ற ஆப்ஷனை கொண்டு வந்தது வாட்ஸ் அப்.

அதாவது, View Once ஆப்ஷனை தேர்வு செய்து நீங்கள் இமேஜ்களை அனுப்பினால், மற்றவர் ஒருமுறை மட்டுமே அதை பார்க்க முடியும்.

அதன்பின் தானாகவே குறித்த இமேஜ் நீக்கப்பட்டுவிடும், ஆனால் பலரும் Screenshot எடுத்துக்கொள்வதாக புகார் கூறப்பட்டது.

இதனையடுத்து View Onceல் அனுப்பப்பட்ட இமேஜ்களை Screenshot எடுக்க முடியாதபடி வாட்ஸ்அப் அப்டேட் கொண்டு வந்தது.

இருந்தாலும் WhatsApp Webல் இந்த பிரச்சனை இருந்தால், முழுமையாக View Once, வாட்ஸ் அப் வெப்பில் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


1024 பேர் வரை Group 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் Group Call வசதியில் அப்டேட் கொண்டு வரப்பட்டுள்ளது, இதன்படி வாட்ஸ் அப் குரூப்பில் 512 பேர் வரை இணையலாம் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது 1024 பேர் வரை இணையலாம்.

மேலும் Community வசதியின் மூலம் ஒரே செய்தியை பல்வேறு குரூப்களில் கொண்டு சேர்க்கலாம், அத்துடன் Group Callல் 32 பேர் வரை இணைந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ALSO READ : உலகின் மிக உயரமான பெண்ணின் முதல் விமான பயண அனுபவம் : இணையத்தில் வைரலாகும் புகைப்படம்...

Comments