உலகின் மிக உயரமான பெண்ணின் முதல் விமான பயண அனுபவம் : இணையத்தில் வைரலாகும் புகைப்படம்...
நிறுவனம் அதன் எகானமி பிரிவில் இருந்து அரை டஜன் இருக்கைகளை எடுத்து, ஜெல்கி படுத்திருக்க பிரத்யேகமாக ஒரு இடத்தை உருவாக்கியது
உலகின் மிக உயரமான பெண்ணான ருமேசா கெல்கி, தனது முதல் விமான பயணத்தை மேற்கொண்டுள்ளார். துருக்கிய ஏர்லைன்ஸில் ஆறு இருக்கைகளை அகற்றிய பின்னர், ருமேசா இந்த பயணத்தை, மேற்கொண்டார்
துருக்கியின் இஸ்தான்புல்லில் இருந்து அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவிற்கு 13 மணி நேர விமானத்தில் கெல்கி சென்றார்.
கின்னஸ் படி அவரது உயரம் 215.16 செமீ (7 அடி 0.7 அங்குலம்)
இது குறித்து கெல்கி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எழுதியதாவது: இது எனது முதல் விமானப் பயணம். ஆனால் இது எனது கடைசி பயணமாக இருக்காது.
எனது பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த ஒவ்வொரு நபருக்கும் மனமார்ந்த நன்றி, என அவர் எழுதியுள்ளார். இது துருக்கிய ஏர்லைன்ஸ் உதவியுடன் சாத்தியமானது.
நிறுவனம் அதன் எகானமி பிரிவில் இருந்து அரை டஜன் இருக்கைகளை எடுத்து, ஜெல்கி படுத்திருக்க பிரத்யேகமாக ஒரு இடத்தை உருவாக்கியது.
அவர் தனது பயணத்தின் பல புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். ருமேசா கெல்கி வீவர் சிண்ட்ரோம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் தொழில்நுட்ப மென்பொருள் துறையில் பணிபுரியும் கெல்கி, தனது தொழிலை மேலும் மேம்படுத்த குறைந்தது ஆறு மாதங்கள் அமெரிக்காவில் இருப்பேன் என்று கூறுகிறார்.


Comments
Post a Comment