இதை பார்த்த பலரும் புகைப்படம் அமானுஷ்யமான உணர்வை அளிக்கிறது எனவும், இதை பார்க்க சற்று பயமாக இருக்கிறது எனவும் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.
1900களில் வாழ்ந்த பெண் ஒருவர் கொடாக் கேமராவை பயன்படுத்தி கண்ணாடி முன் எடுத்துக்கொண்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
செல்ஃபி எடுக்கும் பழக்கம் இன்று நம் எல்லோருக்கும் இருக்கும் ஒன்று. நம் மொபைல் ஃபோனில் இருக்கும் கேமராவில் நம்மை நாமே புகைப்படம் எடுத்துக்கொள்வோம் அல்லது ஒரு குழுவாகவோ செல்ஃபி எடுத்துக்கொள்வோம்.
இதற்கேற்றவாறு தற்போதைய மொபைல்களில் முன்னாலும் பின்னாலும் கேமராக்கள் இருக்கிறது.
இப்படி மொபைலில் முன்னாள்கேமராக்கள் இருக்கும் வசதியை அறிமுகப்படுத்தும் முன்னர் ஃபோன், அல்லது நாம் பயன்படுத்திய டிஜிட்டல் கேமராக்களை நம் முகத்தின் பக்கமாக திருப்பி புகைப்படம் எடுத்துகொண்டோம். அல்லது கண்ணாடியின் முன் நின்று கேமராக்களை பயன்படுத்தி புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம்.
அப்படி 1900களில் வாழ்ந்த ஒரு பெண் அப்போது இருந்த கேமராவை வைத்து கண்ணாடி முன் நின்று எடுத்துக்கொண்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் இருப்பது கொடாக் பாக்ஸ் கேமரா. இது 1900ஆம் ஆண்டு எடுக்கப்பட்டிருக்கும் என்கிறது இந்தியா டைம்ஸ் தளம். இந்த ஃபோட்டோ ரெட் இட் தளத்தில் பகிரப்பட்டிருந்தது. மேலும் அதில் கண்ணாடியின் அருகில் இருக்கும் அலமாரியில் இன்னும் சில புகைப்படங்களும் இருக்கின்றன. அவை ஃபோட்டோவில் இருக்கும் அந்த பெண்ணின் ஃபோட்டோகிராஃபி ஆர்வத்தை காட்டுகிறது என்கின்றனர் இணையவாசிகள்.
இதை பார்த்த பலரும் புகைப்படம் அமானுஷ்யமான உணர்வை அளிக்கிறது எனவும், இதை பார்க்க கொஞ்சம் பயமாக இருக்கிறது எனவும் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். சிலர் புகைப்படத்தில் இருக்கும் அறையில் என்ன என்ன பொருட்கள் இருக்கிறது என்பதை ஆராய்ந்தனர்.
மேலும் இப்படி தன்னை தானே புகைப்படம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு அந்த தருணத்தில் தோன்றியதை பாராட்டியும் இருந்தனர். காரணம், புகைப்படங்கள் எடுப்பதே அரிதான, அதிசயமான விஷயமாக பார்க்கப்பட்ட காலத்தில், இந்த யோசனை அவருக்கு எப்படி வந்திருக்கும் என்பது தான் வியக்க வைக்கிறது. அவர் தவறான காலத்தில் பிறந்துவிட்டார் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
ALSO READ : எதுவுமே செய்யல.. ஆனால் கின்னஸ் சாதனை.. பெயரால் சாதித்த 178 பேர்! ஜப்பானில் சுவாரஸ்யம்!
Comments
Post a Comment