எதுவுமே செய்யல.. ஆனால் கின்னஸ் சாதனை.. பெயரால் சாதித்த 178 பேர்! ஜப்பானில் சுவாரஸ்யம்!

 சுவாரசியம் என்னவென்றால் அந்த 178 நபர்களின் பெயரும் “ஹிரோகாசு டனாகா” என்பதாகும்.


ஒரே பேரையுடைய 178 நபர்கள் ஒரே இடத்தில் கூடி புதிய கின்னஸ் உலக சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கின்னஸ் சாதனை செய்பவர்கள் பல விதம். நாம் எதிர்பாராத வகைகளில், புதிய புதிய நிகழ்வுகளை நடத்தி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவார்கள். ஆனால் சமீபத்தில் இவை அனைத்திலும் இருந்து வேறுபட்டு மிக வித்தியாசமான கின்னஸ் சாதனை ஒன்று ஜப்பான் நாட்டில் நிகழ்த்தப்பட்டுள்ளது. டோக்கியோவின் ஷிபியா நெய்பர்ஹுட் அரங்கத்தில் 178 நபர்கள் ஒன்றாக குழுமியுள்ளனர். இதில் சுவாரசியம் என்னவென்றால் அந்த 178 நபர்களின் பெயரும் “ஹிரோகாசு டனாகா” என்பதாகும். இவ்வாறு ஒரே பெயர்களை கொண்டு 178 நபர்கள் ஒன்றாக ஒரே இடத்தில் குழுமி புதிய கின்னஸ் உலக சாதனை ஒன்றை நிகழ்த்தி உள்ளார்கள்.

இதற்கு முன் மார்தா ஸ்டூவர்ட்ஸ் என்ற பெயரைக் கொண்ட அமெரிக்காவை சேர்ந்த 164 பேர் ஒன்றாக ஒரே இடத்தில் கூடியதே உலக சாதனையாக இருந்தது. ஆனால் இப்பொழுது ஜப்பானை சேர்ந்தவர்கள் அந்த சாதனையை முறியடித்துள்ளனர். மேலும் இந்த வித்தியாசமான நிகழ்ச்சியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பட்ட மக்களும் கண்டு களித்தனர்.

கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தப்பட்டதை அதிகாரபூர்வமாக நடுவர் அறிவித்தவுடன் அரங்கத்தில் இருந்தவர்கள் எழுப்பிய கரகோஷம் விண்ணை பிளந்தது. மேலும் அவர்கள் இவ்வாறு சாதனை செய்த அந்த வீடியோவானது இணையத்தில் பதிவிடப்பட்டு தற்பொழுது மிகப்பெரும் அளவில் வைரலாகி வருகிறது. ஜப்பானின் கின்னஸ் உலக சாதனை அதிகாரப்பூர்வ ட்விட்டர் வலைதள பக்கத்தில் இந்த வீடியோ சனிக்கிழமை பதிவேற்றம் செய்யப்பட்டது. அவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்டதிலிருந்து கிட்டத்தட்ட ஒன்பது லட்சம் பார்வைகளையும் தாண்டி 38 ஆயிரம் லைக்குகளை இந்த வீடியோ பெற்றுள்ளது.

டனாகா என்று பேர் கொண்டு நபர்களை ஒன்றிணைத்து கின்னஸ் சாதனை செய்யும் முயற்சியை அதே பெயர் கொண்ட தூக்கி சேர்ந்த 53 வயதாகும் கார்ப்பரேட் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர் ஒருவர் ஏற்கனவே இரண்டு முறை முயற்சி செய்து இருக்கிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு இவர் முயற்சி செய்தபோது வெறும் 87 பேரை மட்டுமே இவரால் திரட்ட முடிந்தது. எனவே அந்த நேரத்தில் உலக சாதனையில் இடம் பெற முடியவில்லை. ஆனால் மூன்றாவது முறையாக வெற்றிகரமாக இந்த சாதனையை செய்து முடித்துள்ளார்.

இன்னைக்கு கின்னஸ் உலக சாதனை செய்து முடிப்பதற்காக நடுவரின் அறிவுரைப்படி தங்கள் பெயர் பொறித்த டீ ஷர்ட்டுகளை அணிந்து கொண்டு அந்த 178 பேரும் ஒரு பெரிய அரங்கத்திற்குள் 5 நிமிடம் வரை அமர்ந்திருந்தனர். அதில் ஹிரோகாசு டனாகா என்ற பெயர் கொண்ட மூன்று வயது குழந்தை முதல் 80 வயது பெரியவர் வரை அடக்கம். மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஒருவர் வியட்நாமில் இருந்து ஜப்பானிற்கு மிக நீண்ட பயணம் செய்து சாதனையில் பங்கேற்றுள்ளார்


ALSO READ : டிரெண்டாகும் Tattoo கலாச்சாரம்... பச்சைக்குத்த இது தான் காரணமாம்... ஆய்வு தரும் விளக்கம்!


Comments