டிரெண்டாகும் Tattoo கலாச்சாரம்... பச்சைக்குத்த இது தான் காரணமாம்... ஆய்வு தரும் விளக்கம்!

 இதோடு சிலர் தங்கள் வாழ்க்கையில் திருமணம் செய்துக் கொள்வது அல்லது குழந்தைப் பெற்றுக்கொள்வது போன்ற மிக முக்கியமான சுப நிகழ்வுகளை நினைவுக்கூறும் வகையிலும் பச்சைக்குத்திக் கொள்ளும் பழக்கமும் மக்களிடம் அதிகரித்துவிட்டதாக ஆய்வுகள் கூறுகின்றனர்.


டாட்டூஸ் எனப்படும் பச்சைக்குத்தும் பழக்கம் என்பது நம்முடைய முன்னோர்கள் காலத்திலிருந்து பின்பற்றப்படும் ஒரு நடைமுறையாகும். ஊசியின் மூலம் உடல் முழுவதும் பச்சைக் குத்தும் போது நரம்புகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதற்காகவே இந்த முறையை மேற்கொண்டு வந்தனர்.

ஆனால் இன்றைக்குள்ள இளைஞர்கள் பல்வேறு காரணங்களுக்காக உடல் முழுவதும் டாட்டூ போடும் பழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு டிரெண்டாகும் Tattoo களை ஏன் மக்கள் அதிகளவில் பின்பற்றத் தொடங்கிவிட்டனர். இதற்கானக் காரணம் என்ன? என்பது குறித்து இங்கே அறிந்து கொள்வோம்.

மக்கள் ஏன் பச்சைக்குத்துக்கின்றனர்.. ஆய்வு தரும் விளக்கம்….

சமீபத்தில் பச்சைக்குத்தும் பழக்கத்தை ஏன் மக்கள் கடைப்பிடிக்கின்றனர் என்பது குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்டது. இதன்படி ஒருவரின் வாழ்க்கை அனுபவம் மற்றும் மனித குறியீட்டு பிரதிநிதித்துவம் அடிப்படையில் பச்சைக்குத்தப்படுகிறது என்கிறது ஆய்வு. இதோடு பல காரணங்களும்இதற்கு கூறப்படுகிறது.


சுய அடையாளம் காணுதல்:

பச்சைக்குத்திக் கொள்வதற்கான மிகவும் பிரபலமான காரணங்களில் ஒன்று ஒருவரின் சுய அடையாளத்தைக் காண்பிக்கத்தான் என்கிறது ஆய்வு. இதோடு மற்றவர்களிடமிருந்து தனித்துவமாகத் தெரிவதற்கும் இன்றைய இளைஞர்கள் டாட்டூவை அதிகளவில் போட தொடங்கிவிட்டனர்.

சுய மரியாதை மற்றும் நம்பிக்கை அதிகரிப்பு:

பச்சைக்குத்துதல்கள் என்பது ஒவ்வொருவரின் உள் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக அமைகிறது. அதிலும் என்ன மாதிரியான புகைப்படங்களை பச்சைக்குத்துகின்றனர் ன்பதைப் பொறுத்து ஒருவரின் சுய மரியாதை அதிகரிக்கிறது.

இதோடு தன்னுடைய அடையாளத்தைத் தனித்துவமாக காண்பிப்பதோடு, இன்றைக்குள் பேஷனாகவும் டாட்டூஸ் பார்க்கப்படுகிறது. மேலும் பச்சைக்குத்துவது ஒரு நபரின் வலி சகிப்புத்தன்மை, குறிப்பிட்ட மதம் ஆன்மீக பராம்பரியத்துடன் அடையாளம் காணப்படுவதையும் குறிக்கிறது.



இதோடு சிலர் தங்கள் வாழ்க்கையில் திருமணம் செய்துக் கொள்வது அல்லது குழந்தைப் பெற்றுக்கொள்வது போன்ற மிக முக்கியமான சுப நிகழ்வுகளை நினைவுக்கூறும் வகையிலும் பச்சைக்குத்திக் கொள்ளும் பழக்கமும் மக்களிடம் அதிகரித்துவிட்டதாக ஆய்வுகள் கூறுகின்றனர். குறிப்பாக தங்களுடன் உயிருக்கு உயிராக இருந்தவர்கள் மறைவுக்கு மரியாதை அல்லது வருத்தத்தை வெளிப்படுத்த தாங்களே தங்களுக்கு பச்சைக்குத்தும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர்.

 பொதுவாக 1970 களில், பச்சை குத்தல்கள் என்பதுமேற்கத்திய சமூகங்களில் ஒரு கலாச்சார தடையை உருவாக்கியது என்றும், பெரும்பாலும் குற்றவாளிகளை அடையாளம் காண்பித்துக் கொள்வதற்காகவும் நடைமுறையில் இருந்துள்ளது. இதோடு ஜப்பான் முதல் எகிப்து வரை, மக்கள் நீண்ட காலமாக மற்றும் பல காரணங்களுக்காக டாட்டூஸ் போட்டுக்கொண்டுள்ளனர். பச்சைக்குத்துவதற்கு என்று பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் இன்றைக்குள்ள இளைஞர்கள் பெரும்பாலும் எந்தவித காரணமும் இல்லாமல் பச்சைக்குத்தும் பழக்கத்தைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்பை விட இன்றைய இளைஞர்கள் உடல் முழுவதும் பச்சைக்குத்தும் பழக்கத்தை கடைப்பிடித்து வருகின்றனர்.





Comments