பாகிஸ்தானில் ஒரு ரஜினிகாந்த்? - இணையவாசிகளை கவரும் சூப்பர்ஸ்டாரின் doppelganger....
ஆனால் ரஜினிகாந்த் யாரென்று அவருக்கு தெரியாததால் அவர் அதை பற்றி பெரிதாக யோசிக்கவில்லை என அரப் நியூஸ் பத்திரிக்கைக்கு தெரிவித்தார்.
நமக்கு பிடித்த சினிமா ஹீரோக்கள், ஹீரோயின்கள் போல காட்சியளிக்கவேண்டும் என்று நமக்கு ஆசை இருக்கும். சிலர் இயற்கையாக பார்ப்பதற்கு அவர்களைப் போல இருப்பார்கள். இவர்களை பார்த்து நாம் சமயங்களில் நட்சத்திரங்கள் என்று ஏமாந்திருப்போம்.
விராட் கோலி, ஐஸ்வர்யா ராய் doppelgangerகளைத் தொடர்ந்து, தற்போது இணையத்தில் பேசப்படுபவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் doppelganger தான்!
பார்ப்பதற்கு அச்சு அசலாக ரஜினிகாந்த் போல காட்சியளிக்கும் இவரது பெயர் ரெஹ்மத் கிஷ்கோரி. பாகிஸ்தானை சேர்ந்த இவர் ஓய்வுபெற்ற ஒரு அரசாங்க அதிகாரி. இவர் வேலைப்பார்த்துக் கொண்டிருந்த காலத்தில் இவரது சக ஊழியர்கள் இவர் பார்ப்பதற்கு ரஜினிகாந்த் போல இருப்பதாக பல முறை கூறியுள்ளனர்.
ஆனால் ரஜினிகாந்த் யாரென்று அவருக்கு தெரியாததால் அவர் அதை பற்றி பெரிதாக யோசிக்கவில்லை என அரப் நியூஸ் பத்திரிக்கைக்கு தெரிவித்தார்.
இவரது உடல்மொழி, ஹேர்ஸ்டைல், நடை என அனைத்துமே ரஜினிகாந்த்தை நினைவுகூரும் வகையில் இருக்கிறது. பல முறை பலர் கூறிய பின்னர் இணையத்தில் சூப்பர்ஸ்டாரை பற்றி தேடி அறிந்துள்ளார். "அவரை குறித்த தகவல்களை அறிந்த பின்னர் ரஜினிகாந்த்தின் பலகோடி ரசிகர்களின் நானும் ஒருவனாகிவிட்டேன்! மேலும் எனக்கு அவர் மீது அதீத மரியாதையும் பிறந்துள்ளது" என கூறுகிறார் கிஷ்கோரி
முதலில் பெரிதாக இதை கண்டுகொள்ளாத கிஷ்கோரி, அவருக்கு கிடைத்த புகழையும், வரவேற்பையும் பின்னர் எஞ்சாய் செய்ய தொடங்கியுள்ளார். தற்போது ரஜினிகாந்த்தை நேரில் சந்திக்க மிகவும் விரும்புவதாக கூறினார்.
பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் அதிகமாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தொடங்கிய கஷ்கோரி, தற்போது ரஜினிகாந்தை போல பாவனைகளை செய்யத் தொடங்கியுள்ளார். முக்கியமாக அவரது நடை, சிகரெட் பற்றவைக்கும் ஸ்டைல், கூலிங் கிளாஸ் மாட்டிக்கொள்வது போன்றவையை இவர் இமிடேஷன் செய்கிறார்.
"ஒரு முறை கராச்சிக்கு மருத்துவ சிகிச்சைக்காக சென்றபோது விமான நிலையத்தில் என்னை பலர் சூழ்ந்துகொண்டனர். நீங்கள் ரஜினிகாந்த் தானே? என்று அவர்கள் என்னிடம் கேட்டனர். அப்போது நான், ஆமாம், ஆனால் பாகிஸ்தானின் ரஜினிகாந்த் எனக் கூறினேன்" என்றார்.
ALSO READ : உலகின் மிக உயரமான பெண்ணின் முதல் விமான பயண அனுபவம் : இணையத்தில் வைரலாகும் புகைப்படம்...

Comments
Post a Comment