மழைக்காலத்திற்கு இஞ்சி சட்னி அரைச்சு சாப்பிட்டால் ரொம்ப நல்லது..! ரெசிபி இதோ...

 இஞ்சியை உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்வது நல்லது. அப்படி இந்த இஞ்சி சட்னியையும் வாரத்தில் 2 முறை சமைத்து சாப்பிடுங்கள். செய்முறை இதோ...


பொதுவாகவே மழைக்காலத்தில் செரிமானம் மெதுவாக நடக்கும். இதனால் எந்த உணவையும் எளிதில் செரிக்காது. வயிறும் மந்தமாக இருக்கும். சிலர் அடிக்கடி வயிற்று வலியாலும் சிரமப்படுவார்கள். இதுபோன்ற உபாதைகளை தடுக்க சிலபல வைத்தியங்களை செய்ய வேண்டும். அந்த வகையில் செரிமானத்தை தூண்டி , வயிற்று பிரச்சனைகளை சரி செய்யும் இஞ்சியை உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்வது நல்லது. அப்படி இந்த இஞ்சி சட்னியையும் வாரத்தில் 2 முறை சமைத்து சாப்பிடுங்கள். செய்முறை இதோ...

தேவையான பொருட்கள் :

இஞ்சி - 1/2 கப்

கடலை பருப்பு - 2 ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 5

கறிவேப்பிலை - சிறிதளவு

புளி - சிறிதளவு

வெல்லம் - 1/2 tsp

எண்ணெய் - 2 tsp

உப்பு - தே.அ


செய்முறை :

முதலில் இஞ்சியை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள்.

பின் கடாய் வைத்து எண்ணெய் ஊற்று இஞ்சியை வதக்கி எடுத்துக்கொள்ளுங்கள்.

பின் அதிலேயே கடலைப்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

பின் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, புளி சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.

அவை ஆறியதும் அனைத்தையும் ஒன்றாக ஜாரில் சேர்த்துக்கொள்ளுங்கள். அதோடு வெல்லம் மற்றும் உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.

இறுதியாக அதை வழித்து கிண்ணத்தில் சேர்த்து தாளித்துக்கொள்ளுங்கள்.

அவ்வளவுதான் இஞ்சி சட்னி தயார்.





Comments

Popular posts from this blog

டீ, காபியில் பட்டர் போட்டு குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

தலைகீழாய் தொங்கிய படி பியானோ வாசிக்கும் இளம்பெண்! மெய்சீர்க்க வைக்கும் காட்சி...

ருசியான நாவூறும் நண்டு குருமா செய்வது எப்படி? இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்....