நாவில் எச்சில் ஊறவைக்கும் இந்த காயை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆச்சரிய நன்மைகள்...

 சுவைமிக்க காய்கறிகளில் ஒன்று தான் வாழைக்காய்! இதை பொறியலாகவோ அல்லது வறுவலாகவோ சாப்பிடும் போதும் மிகவும் சுவையாக இருக்கும்.

வாழைக்காய் சுவையானது மட்டுமல்ல மிகவும் ஆரோக்கியமானதும் கூட..!

வாழைக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதினால், உடல் எடை குறையும். ஏனெனில் இது குடலை சுத்தப்படுத்தி, அதிலுள்ள கொழுப்பு செல்களை அழிக்கிறது.

வாழைக்காய் அதிக நார்சத்து மற்றும் ஸ்டார்ச் கொண்டுள்ளதால், குடல்களை சுத்தப்படுத்தி,அதன் இயக்கத்தை அதிகப்படுத்துகிறது.மேலும் மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு தருகிறது.

வாழைக்காய் ஜீரண உறுப்புகளுக்கு மற்றும், உணவுக்குழாய்களுக்கு போஷாக்கு அளிக்கிறது. குடலில் இருக்கும் ப்ரோபயாடிக் நுண்ணுயிர்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறது.

வாழைக்காயில் உப்புச்சத்து குறைவாகவும் பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளதால், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கும்.

வாழைக்காய் சாப்பிட்டால் வயிறு இரைச்சல், கழிச்சல், வாயில் நீர் ஊறுதல், இருமல் போன்ற நோய்கள் சரியாகும்.

வாழைக்காயில் காணப்படும் விட்டமின் ஏ மற்றும் சி ஆகியவை உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை நமக்கு வழங்குகிறது.

வழைக்காய் விட்டமின், கால்சியம், மெக்னீசியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இவைகள் எலும்பிற்கு போதிய பலம் தந்து, மூட்டு வலி, ஆஸ்டியோ போரோஸிஸ் ஆகிய நோய்களிலிருந்து நம்மை காப்பாற்றுகிறது.



ALSO READ : ருசியான நாவூறும் நண்டு குருமா செய்வது எப்படி? இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்....


Comments

Popular posts from this blog

டீ, காபியில் பட்டர் போட்டு குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

தலைகீழாய் தொங்கிய படி பியானோ வாசிக்கும் இளம்பெண்! மெய்சீர்க்க வைக்கும் காட்சி...

ருசியான நாவூறும் நண்டு குருமா செய்வது எப்படி? இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்....