நீங்கள் நீண்ட காலம் இளமையாக தெரியணுமா? இந்தவொரு பருப்பை இப்படி பயன்படுத்தி பாருங்க!! விரைவில் பலன் தரும்....

 இன்றைய காலத்தில் பலரும் முகத்தை அழகாக வைத்த கொள்ள வேண்டும் என்று நினைத்து பல வழிகளில் முயற்சி செய்து வருகிறார்கள்.

அதிலும் சிலர் கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட பொருட்களை வாங்கி பயன்படுத்தி முகத்தை மேலும் பாழாக்குகின்றனர். அதற்கு வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே எளிய முறையில் முகத்தை இளமையுடன் வைத்து கொள்ள முடியும். அதற்கு மைசூர் பருப்பு உதவுகின்றது.

இது சருமத்தில் உள்ள அழுக்குகளை போக்கி, சரும நிறத்தை மேம்படுத்த உதவுவதோடு, சருமத்தை நீண்ட காலம் இளமையாக வைத்துக் கொள்ளும்.

அந்தவகையில் மைசூர் பருப்பை எதனுடன் சேர்த்து பயன்படுத்தலாம் என்று இங்கே பார்ப்போம்.    


* ஒரு டேபிள் ஸ்பூன் மைசூர் பருப்பு பொடியுடன் 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெய், 1 டீஸ்பூன் கிளிசரின் மற்றும் 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இதனை  வாரத்திற்கு ஒருமுறை போட்டு வந்தால், முகப்பரு பிரச்சனையைத் தடுக்கலாம்.

* ஒரு பௌலில் மைசூர் பருப்பு பொடி மற்றும் கடலை மாவை சமஅளவில் எடுத்து, காய்ச்சாத பாலை ஊற்றி பேஸ்ட் செய்ய வேண்டும். பின் அதை முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின்னர் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

* மைசூர் பருப்பு பொடியுடன் தேன் சேர்த்து பேஸ்ட் செய்ய வேண்டும். அதுவே சாதாரண சருமத்தைக் கொண்டவரானால், தயிர் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து பேஸ்ட் செய்ய வேண்டும். பின் அதை முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவி வரலாம்..

* மைசூர் பருப்பு பொடியுடன் காய்ச்சாத பச்சை பால் சேர்த்து பேஸ்ட் செய்ய வேண்டும். பின் அதை முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமத்தின் நிறம் மேம்படும்.




Comments

Popular posts from this blog

டீ, காபியில் பட்டர் போட்டு குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

தலைகீழாய் தொங்கிய படி பியானோ வாசிக்கும் இளம்பெண்! மெய்சீர்க்க வைக்கும் காட்சி...

ருசியான நாவூறும் நண்டு குருமா செய்வது எப்படி? இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்....