நாவூறும் சுவையுடன் சிக்கன் லாலிபாப் மசாலா.....
குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். ஹோட்டலில் கிடைக்கும் இந்த ரெசிபியை வீட்டில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சிக்கனை ஊறவைக்க...
சிக்கன் லெக் பீஸ் - 7
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
மிளகாய் சாஸ் - 2 டீஸ்பூன்
தக்காளி கெட்ச்அப் - 2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
இஞ்சி - பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
முட்டை - 1
சோள மாவு - 1 டீஸ்பூன்
மைதா - 1 டீஸ்பூன்
எண்ணெய்- பொரிக்க தேவையான அளவு
சாஸ் செய்ய
எண்ணெய் - 2 டீஸ்பூன்
பூண்டு - 2 பல்
இஞ்சி - 2
சிவப்பு மிளகாய் - 2
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
மிளகாய் சாஸ் - 2 டீஸ்பூன்
தக்காளி கெட்ச்அப் - 2 டீஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
வெங்காய தால் - கார்னிஷ் செய்ய
செய்முறை
பூண்டு, சிவப்பு மிளகாய், வெங்காய தாள், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
முட்டையை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக அடித்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சோயா சாஸ், மிளகாய் சாஸ், தக்காளி கெட்ச்அப், எலுமிச்சை சாறு, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மிளகு தூள், முட்டை, சோள மாவு மற்றும் மைதா மாவு போட்டு நன்றாக கலந்து அதில் சிக்கனை போட்டு நன்றாக பிரட்டி 1 மணிநேரம் ஊறவைக்க வேண்டும்.
ஒரு மணி நேரம் நன்றாக ஊறியதும், அதனை எண்ணையில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.
சிக்கன் பொன்னிறமாகும் வரை பொரிக்க வேண்டும்.
ஒரு காடாயினை காய வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டு, இஞ்சி, புதிய சிவப்பு மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.
அடுத்து அதில் சோயா சாஸ், மிளகாய் சாஸ் மற்றும் தக்காளி கெட்ச்அப் சேர்த்து நன்கு கலக்கவும்.
பின்பு, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
கடைசியாக அதில் வறுத்த சிக்கன் போட்டு மசாலா சிக்கனை சேரும் படி 2 நிமிடங்கள் வதக்க வேண்டும்.
இறுதியாக, அதில் வெங்காய தாள் தூவி இறக்கி பரிமாறவும்.
இப்போது சூப்பரான சிக்கன் லாலிபாப் மசாலா ரெடி.
Comments
Post a Comment