ஹோட்டல் சுவையில் கம கம வாசனையுடன் இட்லி சாம்பார் செய்ய தெரியுமா?
பொதுவாக காலை உணவு என்றாலே ஞாபகம் வருவது இட்லி - சாம்பார் தான். அந்தளவு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய காலையுணவு இதுவாகும்.
உடலுக்கு தேவையான புரதம், கார்போவைதரேட்டு அதிகம் உள்ளதால் இதனை காலையில் எடுத்துக் கொள்வதால் உடல் சுறுசுறுப்புடன் இருப்பதற்கு வழிசமைக்கிறது.
இட்லிக்கு சாம்பார் தான் சூப்பரான காமினேஷன் என்று கூறுவார்கள். இதன்படி சாம்பார்களில் உடுப்பி சாம்பார் , உருளைக்கிழங்கு சாம்பார், முள்ளங்கி சாம்பார் , முருங்கைக்காய் சாம்பார் என எண்ணற்ற வகைகள் காணப்படுகிறது.
அந்த வகையில் ஹோட்டல் சுவையில் எவ்வாறு இட்லி சாம்பார் செய்வது குறித்து தொடர்ந்து தெரிந்துக் கொள்வோம்.
தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு - 1/2 கப்
தண்ணீர் - 2 கப்
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 5
சின்ன வெங்காயம் - 5
பூண்டு - 2
மஞ்சள் தூள் 1/2 மேசைக்கரண்டி
வெந்தயம் - 1 மேசைக்கரண்டி
பெருங்காயம் - 2 துண்டு
தாளிப்பு பொருட்கள்
தேங்காய் எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கடுகு - 1/4 மேசைக்கரண்டி
சீரகம் - 1/4 மேசைக்கரண்டி
வர மிளகாய் - 2
கறிவேப்பிலை - தேவையானளவு
சின்ன வெங்காயம் - 4
உப்பு - தேவையானளவு
சாம்பார் பொடி - 1/2 மேசைக்கரண்டி
தயாரிப்பு முறை
முதலில் பாசிப்பருப்பை ஒரு குக்கரில் போட்டு அதில் 2 கப் தண்ணீர், நாட்டு தக்காளி , பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
பருப்பை நன்றாக வேகும்வரை விசில் விட்டு இறக்கவும், பருப்பு குலைந்து இருந்தால் தான் சாம்பார் சுவையாக இருக்கும்.
பின்னர் கடாயில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு அதில் தாளிப்புக்கு தேவையான பொருட்களை சேர்த்து நன்றாக தாளித்துக் கொள்ள வேண்டும்.
இதனை தொடர்ந்து சிறிது தண்ணீர் சேர்த்து பருப்பு விழுது இரண்டையும் தாளிப்புடன் சேர்த்து கட்டியாக கலந்துக் கொள்ள வேண்டும்.
இதில் வெந்தயம் மற்றும் பெருங்காயம் பொடி சேர்த்து கொதிக்க வைத்து 5 நிமிடம் இறக்கிவிட்டால் கமகம இட்லி சாம்பார் தயார்!
Comments
Post a Comment