பார்த்தாலே சாப்பிடத்தூண்டும் மாப்பிள்ளை சொதி! இப்படி செஞ்சு சாப்பிடுங்க....

 தேங்காய் பாலில் நாவூறும் சுவையில் மாப்பிள்ளை சொதி செய்து சாப்பிட்டால் அதன் ருசி காலத்துக்கும் மறக்காது.


இட்லி, தோசை, இடியாப்பம் என அனைத்திற்கும் தொட்டு சுவைக்கலாம்.


தேவையான பொருட்கள்


தேங்காய் எண்ணெய்- தேவையான அளவு

சின்ன வெங்காயம்- 10 முதல் 15

பச்சை மிளகாய்- தேவையான அளவு

இஞ்சி - தேவையான அளவு

உருளைக்கிழங்கு- 2

கேரட்- 2

பீன்ஸ்- 12

தேங்காய் பால்- 3/4 லிட்டர்

உப்பு- தேவையான அளவு

பாசிப்பருப்பு- 1 கப்

எலுமிச்சை -1

கடுகு -1 தேக்கரண்டி

உளுந்து- 1 தேக்கரண்டி

கருவேப்பிலை- தேவையான அளவு

கொத்தமல்லி- தேவையான அளவு


செய்முறை

முதலில் தேங்காய்களை நன்றாக சுத்தம் செய்து தேங்காய் பால் எடுத்துக் கொள்ளுங்கள், கெட்டியான தேங்காய் பால், இரண்டாவதாக எடுத்த தேங்காய் பால் என இரண்டாக தனித்தனியாக பிரித்தும் எடுத்துக் கொள்ளலாம். 

அடுத்ததாக பாசிப்பருப்பை நன்றாக வேகவைத்து மசித்துக்கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், முருங்கைகாயை வேகவைத்துக் கொள்ளவும், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

அடுத்ததாக வேறு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும், தேங்காய் எண்ணெய் ஊற்றவும்.

இதில் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கிய பின்னர், இஞ்சியை சேர்க்கவும், இதனுடன் பச்சை மிளகாய் சேர்க்கவும்.

நன்றாக வதங்கியதும், அடுப்பில் ஏற்கனவே வேகவைத்துள்ள காய்கறிகளுடன் சேர்க்கவும், இப்போது பாசிப்பருப்பை இதனுடன் சேர்க்க வேண்டும்.

சற்று கொதித்த பிறகு, கடைசியாக தேங்காய் பாலை சேர்த்து கொதிக்கவைக்கவும், கடைசியாக  தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுந்து மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சொதியுடன் சேர்க்கவும்.

இதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறை சேர்த்துவிட்டால் அவ்வளவு தான் மணமணக்கும் மாப்பிள்ளை சொதி தயாராகி விடும்!!! 



ALSO READ : வயிற்றை குளிர்ச்சிப்படுத்தும் அசத்தலான பானம்: வாங்க பார்க்கலாம்.....

Comments

Popular posts from this blog

டீ, காபியில் பட்டர் போட்டு குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

தலைகீழாய் தொங்கிய படி பியானோ வாசிக்கும் இளம்பெண்! மெய்சீர்க்க வைக்கும் காட்சி...

ருசியான நாவூறும் நண்டு குருமா செய்வது எப்படி? இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்....