வயிற்றை குளிர்ச்சிப்படுத்தும் அசத்தலான பானம்: வாங்க பார்க்கலாம்.....

 பொதுவாக சிறியவர்கள் முதல் பெரியவரை அனைவருக்கும் கோடைக்காலங்களில் வயிற்றை குளு குளு என வைத்துக் கொள்ள லஸ்ஸி சாப்பிடலாம்.

கோடைக்காலங்களில் எமது உடல்நிலை மிகவும் வெப்பமாக இருக்கும். இது போன்ற நேரங்களில் வயிற்றுக்கும் உடலுக்கும் குளிர்ச்சியை தரக்கூடிய வகையில் தயிர் மற்றும் யோகட் எடுத்துக் கொள்வது சிறந்தாகும்.

இதனை மதிய உணவின் பின்னர் எடுத்துக் கொள்ள வேண்டும். இதன்படி குளிர்ச்சி பொருந்திய லஸ்ஸி தயாரிப்பது குறித்து தெளிவாக தெரிந்து கொள்வோம்.

லஸ்ஸிக்கு தேவையான பொருட்கள்:

தயிர் - ஒரு கப்

பால் - அரை கப்

நாட்டுச் சர்க்கரை - 2 மேசைக்கரண்டி

ஏலக்காய் - ஒன்று

குங்குமப்பூ - ஒரு சிட்டிகை


தயாரிப்பு முறை

முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் கெட்டியான தயிர் மற்றும் ஏலக்காய் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதனை தொடர்ந்து இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் இட்டு அதில் குங்குமப்பூ சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தொடர்ந்து கலவையுடன் பால் மற்றும் நாட்டுச் சர்க்கரை சேர்த்து மீண்டும் நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் அக்கலவை தொட்டு பார்க்கும் போது கெட்டியாக இருக்க வேண்டும்.

அதனை ஒரு பவுல் அல்லது தம்ளரில் ஊற்றி அதனுடன் சிறிய தூண்டகளாக நறுக்கிய முந்திரி, பாதாம் என்பவற்றை சேர்த்து மதிய உணவிற்கு பின் அசத்தலாக பரிமாறலாம்.  


ALSO READ : நாவில் எச்சில் ஊறும் அதிரசம் செய்வது ரொம்ப சுலபம்....

Comments

Popular posts from this blog

டீ, காபியில் பட்டர் போட்டு குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

தலைகீழாய் தொங்கிய படி பியானோ வாசிக்கும் இளம்பெண்! மெய்சீர்க்க வைக்கும் காட்சி...

ருசியான நாவூறும் நண்டு குருமா செய்வது எப்படி? இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்....