நாவில் எச்சில் ஊறும் அதிரசம் செய்வது ரொம்ப சுலபம்....

 இனிப்பு பண்டங்களை நினைத்தாலே பலருக்கும் நாவில் எச்சில் ஊறும், அதுவும் காலம் காலமாக நாம் ருசிக்கும் பண்டங்களில் ஒன்று அதிரசம்.

இதை பக்குவமான முறையில் மிக எளிதாக வீட்டிலேயே செய்வது எப்படி என பார்க்கலாம்.


தேவையான பொருட்கள்

பச்சரிசி- அரை கிலோ

வெல்லம்- அரை கிலோ

ஏலக்காய்- தேவையான அளவு

எண்ணெய்- தேவைக்கேற்ப

செய்முறை

பச்சரிசியை மூன்று மணிநேரம் ஊறவைத்துக் கொள்ளவும், இதனை வெள்ளை துணியில் பரப்பிவைத்து நிழலில் உலர்த்தி எடுக்கவும்.

ஈரம் காய்ந்த பின்னர் நைஸாக அரைத்துக் கொள்ளவும். இதற்கிடையே வெல்லத்தினை பாகு காய்ச்சி எடுக்கவும், பாகு பக்குவமாக வந்த பின்னர் ஏலக்காய் தூள் சேர்க்கவும்.

இதனுடன் அரைத்து வைத்த பச்சிரிசி மாவை சிறிது சிறிதாக கொட்டி கிளறவும்.

இதன்பின் சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வாழையிலையில் தட்டி சூடான எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையான அதிரசம் தயார்!!!


ALSO READ : ஹோட்டல் ஸ்டைலில் உருளைக்கிழங்கு சமோசா செய்யலாம் வாங்க.....

Comments