சிம்பிளான ரெசிபியில் டேஸ்டியான ஆந்திரா ஸ்டைல் வேர்க்கடலை சட்னி...

 கெட்டிப் பதத்தில் அரைத்தால் மதிய உணவுக்கு துவையலாக பயன்படுத்திக்கொள்ளலாம். இப்படி பல வகைகளில் 2 இன் ஒன்றாக உதவுகிறது.


தென்னிந்திய உணவுகளில் வேர்க்கடலைச் சட்னி தனித்துவ சுவை கொண்ட உணவாகும். எந்த உணவுக்கும் தொட்டுக்கொள்ளலாம். அரைத்த வேர்க்கடலை விழுதில் தண்ணீர் கொஞ்சம் ஊற்றினால் இட்லி , தோசைக்கு தொட்டுக்கொள்ளலாம்.

கெட்டிப் பதத்தில் அரைத்தால் மதிய உணவுக்கு துவையலாக பயன்படுத்திக்கொள்ளலாம். இப்படி பல வகைகளில் 2 இன் ஒன்றாக உதவுகிறது. அதுமட்டுமன்றி வேர்க்கடலை மூலம் இரும்புச் சத்தும் நமக்கு கிடைக்கிறது. சரி ஆந்திரா ஸ்டைலில் காரசாரமான வேர்க்கடலை சட்னி எப்படி அரைப்பது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

வேர்க்கடலை - 1 கப்

காய்ந்த மிளகாய் - 3

இஞ்சி - 1 துண்டு

பூண்டு - 4

வெங்காயம் - 1/2 பாதி

புளி - சிறிதளவு

உப்பு - தே.அ

தாளிக்க

கடுகு - 1 ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

பெருங்காயத்தூள் - 1/4 ஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்

எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்


செய்முறை :

வேர்க்கடலையை வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள். அதை ஆற வைத்துக்கொள்ளுங்கள்.

பின் அதை தேய்க்க தோல் நீங்கிவிடும். உறிந்த தோலை புடைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

அடுத்ததாக வெங்காயம் மற்றும் காய்ந்த மிளகாய்களையும் 5 நிமிடங்கள் வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள். அதையும் ஆற வையுங்கள்.

அடுத்ததாக அரைக்க மிக்ஸி ஜாரில் வேர்க்கடலையுடன் மற்ற பொருட்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

முதலில் தண்ணீர் ஊற்றாமல் மைய அரையுங்கள். பின் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்க்க நன்கு அரைபட்டுவிடும்.

அதை ஒரு கிண்ணத்தில் வழித்துக்கொள்ளுங்கள். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்துகொள்ளுங்கள்.

இறுதியாக தாளிக்கும் பொருட்களை சேர்த்து தாளித்து கொட்டுங்கள்.

அவ்வளவுதான் ஆந்திரா ஸ்டைல் வேர்க்கடலை சட்னி தயார்.





Comments

Popular posts from this blog

டீ, காபியில் பட்டர் போட்டு குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

தலைகீழாய் தொங்கிய படி பியானோ வாசிக்கும் இளம்பெண்! மெய்சீர்க்க வைக்கும் காட்சி...

ருசியான நாவூறும் நண்டு குருமா செய்வது எப்படி? இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்....