வீட்டிலேயே செய்யலாம் குளு குளு லஸ்ஸி....

 இது குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பிடிக்கும். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்


தேவையான பொருட்கள்: 

தயிர் - ஒரு கப்

 பால் - அரை கப் 

சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன் 

ஏலக்காய் - ஒன்று

 குங்குமப்பூ - ஒரு சிட்டிகை.

செய்முறை: 

ஒரு மிக்ஸி ஜாரில் கெட்டியான தயிர், ஏலக்காய் சேர்க்கவும். 

கொஞ்சம் பாலில் குங்குமப்பூ சேர்த்து கலந்து தயிருடன் சேர்க்கவும்.. 

அத்துடன், முழுமையான கொழுப்புள்ள பால், சர்க்கரை சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும். 

இதனை கொஞ்சம் நேரம் ஃபிரிட்ஜ்ஜில் வைத்து பிறகு பரிமாறலாம்..

 பரிமாறும்போது, ஒரு தம்ளரில் ஊற்றி அதன் மீது, பொடியாக நறுக்கிய வறுத்த முந்திரி, பாதாம் போட்டுக் கொடுத்தால் அசத்தலாக இருக்கும்..






Comments

Popular posts from this blog

டீ, காபியில் பட்டர் போட்டு குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

தலைகீழாய் தொங்கிய படி பியானோ வாசிக்கும் இளம்பெண்! மெய்சீர்க்க வைக்கும் காட்சி...

ருசியான நாவூறும் நண்டு குருமா செய்வது எப்படி? இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்....