நீச்சல் பயிற்சி அரை மணி நேரம் செய்தால் கிடைக்கும் அற்புத பலன்கள் என்ன தெரியுமா?
அரை மணி நேர நீச்சல் பயிற்சியினால் 350-க்கும் மேற்பட்ட கலோரிகள் எரிக்கப்படுகின்றன என்று கூறப்படுகின்றது.
நீந்தும் போது உடலின் எல்லா தசைகளும் வேலை செய்கிறது. கை-கால் மற்றும் தொடைப் பகுதியில் உள்ள தசைகள் வலிமை அடைகிறது.
அதுமட்டுமின்றி இது உடலுக்கு பல நன்மைகளை தருகின்றது. அவை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
நன்மைகள்
* உடலில் கொழுப்பு மற்றும் ரத்த அழுத்த அளவை நீச்சல் கட்டுப்படுத்துகிறது.
* மன அழுத்தத்தைக் குறைத்து, தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
* நீச்சல் உடல் பருமனை விரட்டும்.
* நுரையீரலுக்கு செல்லும் ஆக்சிஜனின் அளவை அதிகப்படுத்தும்.
* தசை இறுகும். நரம்பு மண்டலம் சீராகும். நன்கு பசி எடுக்கும். நல்ல தூக்கம் வரும்.
* மனதுக்கு மகிழ்ச்சியையும், உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும்.
முக்கிய குறிப்பு
* காலி வயிற்றுடனோ, வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டோ நீச்சல் பயிற்சி செய்யக்கூடாது.
* நீந்தும் முன், தகுதி பெற்ற பயிற்சியாளரும், தகுதி பெற்ற மீட்பாளர்களும் நீச்சல் குளத்தில் இருப்பது அவசியம்.
* நீச்சல் குளத்தில் இருக்கும் தண்ணீர், சுழற்சி முறையில் சுத்தப்படுத்தப்பட வேண்டியது அவசியம்.
ALSO READ : உங்களுக்கு தொண்டையில் சளி கட்டிக்கொண்டு பாடாய்படுத்துதா? இதனை நொடியில் போக்க சில டிப்ஸ் இதோ!
Comments
Post a Comment