சத்தான அரைக்கீரை வடை! செய்வது ரொம்ப எளிது...

 மாலை நேரம் வந்துவிட்டாலோ எதையாவது எடுத்து கொரிக்கவே தோன்றும், அந்நேரம் துரித உணவுகளின் பக்கம் செல்லாமல் மிக எளிதாக அதுவும் வீட்டிலேயே செய்யக்கூடிய கீரை வடை பற்றி இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

சத்துக்கள் நிறைந்த அரைக்கீரை

ஆரோக்கியமான வாழ்வுக்கு கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள் என மருத்துவர்களே பரிந்துரைப்பார்கள்.

ஏனெனில் கீரையில் நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கின்றன.

அரைக்கீரையானது ஆரம்ப கட்ட மனநோயை சரிசெய்யும் சக்தி கொண்டது, இதை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையே இருக்காது.

உடலுக்கு குளிர்ச்சியளிக்கும் அரைக்கீரை நரம்புகளை பலப்படுத்தும், சித்த வைத்தியத்தில் முக்கிய கீரையாக பார்க்கப்படும் அரைக்கீரையை கொண்டு வடை செய்வது எப்படி என பார்க்கலாம்.


தேவையான பொருட்கள்

அரைக்கீரை- ஒரு கப் (பொடியாக நறுக்கியது)
வெங்காயம்- ஒரு கப் (பொடியாக நறுக்கியது)
உளுத்தம்பருப்பு- அரை கப்
கடலைப்பருப்பு- அரை கப்
இஞ்சி- ஒரு துண்டு
காய்ந்த மிளகாய்- 5 (காரத்திற்கு ஏற்ப)
சோம்பு- ஒரு டீஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை

உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் நன்றாக கழுவிவிட்டு இரண்டு மணிநேரம் ஊறவைத்துக் கொள்ளுங்கள்.

மிக்ஸி ஜார் ஒன்றில் ஊறவைத்த பருப்புகளுடன், சோம்பு, உப்பு, இஞ்சி, காய்ந்த மிளகாய் சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

இதனை ஒரு பாத்திரத்தில் மாற்றிவிட்டு கீரை, வெங்காயம் சேர்க்கவும். வடை தட்டும் பதத்துக்கு மாவு இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.

கடைசியாக வாணலியில் எண்ணெய் விட்டு நன்றாக காய்ந்த பின்னர், சிறு சிறு வடைகளாக தட்டி எடுத்தால் சுவையான கீரை வடை தயார்!

மாலை நேர சத்தான சிற்றுண்டியாக கீரை வடையை ருசிக்கலாம்!!! 






Comments

Popular posts from this blog

டீ, காபியில் பட்டர் போட்டு குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

தலைகீழாய் தொங்கிய படி பியானோ வாசிக்கும் இளம்பெண்! மெய்சீர்க்க வைக்கும் காட்சி...

ருசியான நாவூறும் நண்டு குருமா செய்வது எப்படி? இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்....