கழிவறையை விட மொபைல் போன்கள் ஆபத்தானது!
இளைஞர்களின் கையில் உள்ள மொபைல் போன்களில் கழிவறையில் உள்ள கிருமிகளை விட 10 மடங்கு அதிகமான கிருமி இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.
மொபைல் போன்கள் தற்போது உள்ள நவீன காலத்தில் மனிதர்களிடம் இருந்து பிரிக்க முடியாத ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவிட்டது, சொல்லப்போனால் மனிதனின் மூன்றாவது கை என்ற நிலைக்கு வந்துவிட்டது.
இந்த மொபைல் போன்கள் படிக்க, படம் பார்க்க, உணவு பொருட்களை ஆர்டர் செய்ய, செய்திகளை பகிர என அனைத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.
இப்படி கையை விட்டு எடுக்காமல் பயன்படுத்தும் போன்களில் முழுக்க முழுக்க பாக்டீரியாக்கள் நிறைந்துள்ளது என ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
நாம் செல்லும் எல்லா இடங்களுக்கும் செல்போன்களை எடுத்துச் செல்கிறோம், பல சந்தர்ப்பங்களில் அவற்றை பொது இடங்களில் ஆங்காங்கே பல மேசைகள், பாக்கெட்டுகள், கைகள், பைகள் என பல இடங்களில் வைக்கிறோம்.
இந்த எல்லா இடங்களிலும் பாக்டீரியாக்கள் உள்ளன அவை எல்லாமே போனின் மேற்பரப்பிற்கு பரவுகின்றன.



Comments
Post a Comment