வெறும் காலை வயிற்றில் பச்சை ஜூஸ் குடிச்சால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

 பொதுவாக நம்மில் பலர் பச்சை காய்கறிகளை உணவில் சேர்ப்பதை தவிர்த்து விடுவார்கள்.

இது முற்றிலும் தவறான விஷயமாகும். பச்சை காய்கறிகள் உடலுக்கு பலவகையான சத்துக்களை கொடுகின்றது.

அதுமட்டுமின்றி பல நோய்களில் இருந்து உடலை காக்குகின்றது. அதிலும் தினமும் ஒரு பச்சை காய்கறி ஜூஸ் குடிப்பது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றது. 

அந்தவகையில் பச்சை காய்கறி ஜூஸ் குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென் என்பதை தெரிந்து கொள்வோம். 


நன்மைகள்

* பச்சை இலை காய்கறிகளின் ஜூஸ்கள் உடலின் ஏற்படும் வீக்கத்தை குறைப்பதோடு மட்டுமல்லாமல் இதய நோய்களில் இருந்தும் நம்மை பாதுகாக்கிறது.

*  பச்சை இலை ஜூஸ்கள் உடல் உறுப்புகள் சிறப்பாக செயல்பட பயன்படுவதால் உங்கள் ஆரோக்கியம் மேம்படுகிறது.

 * பச்சை இலை காய்கறிகளின் ஜூஸ்கள் வயிற்று வலி, வயிறு உப்புதல், மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளை சரி செய்கிறது.  

 * அறுவை சிகிச்சை செய்து உடல்நலம் தேறி வருபவர்களுக்கு பச்சை இலை ஜூஸ்கள் சிறந்த தீர்வளிக்கிறது.

*  வெறும் வயிற்றில் இந்த ஜூஸ்களை எடுத்துக் கொள்வதால் உங்கள் மனநிலையையும் மேம்படுத்துகிறது. 

*  பச்சை இலை காய்கறிகள் ஜூஸ்கள் உடலில் நீரேற்றத்தை ஊக்குவித்து, நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் செல்களை அழிக்க உதவுகிறது. இது சருமத்தை பளபளப்பாக மாற்றுகிறது.    

பக்கவிளைவுகள் உண்டா? 

சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள், நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

இதற்கு காரணம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் நார்ச்சத்து மற்றும் புரதம் ஆகிய 2 முக்கிய ஊட்டச்சத்துக்களும் இந்த ஜூஸ்களில் குறைவாக இருப்பதே ஆகும். 




Comments

Popular posts from this blog

வாய்ப்புண்ணால் ரொம்ப அவஸ்தையா? இதனை தடுக்க சில பாட்டி வைத்தியம்! இதோ உங்களுக்காக.....

கண்களில் ஏற்படும் வறட்சியை தடுக்கும் வழிகள் ....

வயிற்று கொழுப்பை வேகமாக கரைக்கனுமா? மறக்காமல் இந்த உடற்பயிற்சிகளை செய்து வாங்க போதும்!