ஆளை அசத்தும் ஐய்யங்கார் வீட்டு சாம்பார் பொடி செய்யலாமா....

 சமையலைப் பொருத்தவரையில் பக்குவம் என்பது மிக மிக முக்கியம்.

ஐய்யங்கார் வீட்டு சாம்பார் ஆளை அசத்தும் சுவையில் இருக்கும்.


தேவையான பொருள்கள்

தனியா - கால் கிலோ

குண்டு மிளகாய் - 125 கிராம்

துவரம்பருப்பு - 100 கிராம்

கடலைப்பருப்பு - 50 கிராம்

மிளகு - 25 கிராம்

வெந்தயம் - 10 கிராம்

விரளி மஞ்சள் - 25 கிராம்

செய்முறை

மேற்கண்ட பொருள்கள் அனைத்தையும் தனித்தனியாக மூன்று நாள் நல்ல சுல்லென்று அடிக்கும் வெயிலில் போட்டு உலர்த்த வேண்டும். பின்னர் தனித்தனியே எண்ணெய் எதுவும் இல்லாமல் வறுத்து எடுத்துக் கொள்ளலாம்.

சூடாக இருக்கும் பொழுது பொடி திரிக்கக் கூடாது. வறுத்த அல்லது நன்கு காய வைத்த மசாலாப் பொருள்கள் சூடு ஆறியவுடன் அரவை மில்லில் கொடுத்து நைசாக அரைத் வாங்கிக் கொள்ளுங்கள்.

அரைத்த பொடியை அப்படியே சூடாக அடைத்து வைக்கக்கூடாது. அது விரைவில் கெட்டி தட்டியோ கெட்டுப் போகவோ வாய்ப்புண்டு. அதனால் சிறிது ஆறவிட்டு, டைட்டான கண்டெய்னரில் போட்டு சேமித்து வையுங்கள். தினசரி பயன்பாட்டுக்கு சிறிய டப்பாவில் வைத்துக் கொள்ளுங்கள்.

அவ்வளவு தான் அய்யங்கார் வீட்டு சாம்பார் பொடி.



ALSO READ : சத்தான அரைக்கீரை வடை! செய்வது ரொம்ப எளிது...

Comments

Popular posts from this blog

டீ, காபியில் பட்டர் போட்டு குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

தலைகீழாய் தொங்கிய படி பியானோ வாசிக்கும் இளம்பெண்! மெய்சீர்க்க வைக்கும் காட்சி...

ருசியான நாவூறும் நண்டு குருமா செய்வது எப்படி? இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்....