ஆத்தாடி எவ்வளவு பெருசு; நபரை பலமுறை கடித்த அனகோண்டா: வீடியோ வைரல்....
வைரலாகி வரும் இந்த வீடியோவில், பல இடங்களில் அனகோண்டா ஒரு நபரை எப்படி கடிக்கிறது என்பதை நீங்கள் பார்க்கலாம்.
- பதபதைக்க வைக்கும் திகில் காட்சி.
- ராட்சத பாம்பின் வைரல் வீடியோ.
- காட்டு விலங்குகள் தொடர்பான வீடியோ.
வைரல் வீடியோ:
சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சமீப காலங்களில் சமூக ஊடகங்களில் காட்டு விலங்குகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. சமூக ஊடக உலகில், ஒவ்வொரு நாளும் விலங்குகளின் வெவ்வேறு வீடியோக்கள் பகிரப்படுகின்றன. ஆனால், தற்போது வெளிவந்துள்ள காணொளி முற்றிலும் மாறுபட்டு மிரட்டலாக உள்ளது. இதில் ஒரு நபர் தனது கைகளில் அனகோண்டாவை தூக்குவதைக் காணலாம். ஆனால் அனகோண்டாவிற்கு அவனுடைய செயல் பிடிக்கவில்லை, இதனால் அந்த அனகோண்டா அந்த நபரை பலமுறை கடிக்கத் தொடங்குகிறது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
அனகோண்டா தாக்கியது
சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், தொப்பி அணிந்த நபர் அனகோண்டாவை தனது கைகளில் தூக்குவதை நீங்கள் காணலாம். அதன்பின் அடுத்த நொடியே அனகோண்டா அவனை பல இடங்களில் கடிக்க முயல்கிறது.
வீடியோவை இங்கே பார்க்கவும்
வீடியோவில் காணப்பட்ட நபரின் பெயர் நிக் என்றும் அவர் ஒரு விலங்கு பிரியர் என்றும் தெரிகிறது.இவர் காட்டு விலங்குகள் தொடர்பான வீடியோக்களை குறிப்பிட்ட இடைவெளியில் பதிவிட்டு வருகிறார். இந்த வீடியோவை நிக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் (@nickthewrangler) பதிவேற்றியுள்ளார்.
ALSO READ : உலகிலேயே பெரிய மரகத கல் : 15.05 கிலோ எடை - விலை மதிப்பு என்ன?

Comments
Post a Comment