உலகிலேயே பெரிய மரகத கல் : 15.05 கிலோ எடை - விலை மதிப்பு என்ன?
இதற்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட எந்த மரகத கல்லையும் விட இந்த கல் பெரியது என கின்னஸ் உலக சாதனைகள் உறுதிபடுத்தியுள்ளது. இதன் எடை 7525 கேரட் அதாவது 1.505 கிலோ கிராம்.
உலகிலேயே மிகப் பெரிய மரகத கல் ஆப்ரிக்காவின் ஜாம்பியா நாட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பச்சை நிறத்தில் மினுங்கும் இந்த கல்லின் புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.
இதற்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட மரகத கல்களையும் விட இந்த கல் பெரியது என கின்னஸ் உலக சாதனை உறுதிபடுத்தியுள்ளது. இதன் எடை 7525 கேரட் அதாவது 1.505 கிலோ கிராம்.
இந்த பிரம்மாண்ட ரத்தினக் கல் குறித்த கூடுதல் தகவல்களைப் பார்க்கலாம்.
ஆப்ரிக்க மண்ணிலிருந்து எடுக்கப்பட்ட கல்
ஜாம்பியா சுரங்கத்தில் பணியாற்றிவரும் இந்தியரான மனாஸ் பானர்ஜி மற்றும் மற்றொரு மண்ணியல் நிபுணரான ரிச்சர்ட் கபேதா ஆகியோரின் குழு தான் காப்பர்பெல்ட் மாகாணத்தில் உள்ள சுரங்கத்தில் இந்த கல்லை கண்டறிந்துள்ளனர்.
இவர்கள் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அங்கு சுரங்கப்பணிகளை மேற்கொண்டனர். இந்த சுரங்க பணிகளை ஆப்ரிக்க அரசுடன் இணைந்து நடத்தி வருகின்றனர்.
யானை, சிங்கம் மற்றும் காண்டாமிருகம் ரத்தினங்கள்
ஆப்ரிக்காவின் பெம்பா பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் இந்த ரத்தினம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு சிப்பெம்பல் என்று பெயரிட்டுள்ளனர். இந்த பெயருக்கு பழங்குடி மக்களின் மொழியில் காண்டா மிருகம் என்று பொருள்.
இந்த கல்லின் உச்சியில் காண்டாமிருகத்துக்கு கொம்பு இருப்பது போல ஒரு நீட்சி இருப்பதனால் இந்த பெயர் வைத்ததாக கூறுகின்றனர்.
ஆப்ரிக்க மண்ணில் இதற்கு முன்னதாகவும் பெரிய அளவிலான இரண்டு மரகத கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் பெயர் இன்ஃபொசு மற்றும் இன்கலாமு.
இன்ஃபோசு என்றால் யானை என்றும் இன்கலாமு என்றால் சிங்கம் என்றும் அர்த்தம். இவை முறையே 2010 மற்றும் 2018ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டன. இவை இரண்டுமே ஒரு கிலோவுக்கு மேல் எடை கொண்டவை.
இந்த வைரங்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
பச்சை நிறத்தில் இருப்பதனால் இது சூப்பர் மேன் படத்தில் வரும் கல் போல உள்ளதாகவும் ஒருவர் கூறியுள்ளார். இதன் மதிப்பு 310 கோடி இருக்கலாம் எனக் கூறுகின்றனர்.


Comments
Post a Comment