முடியை கிடுகிடுவென வளர செய்ய வேண்டுமா? இதோ சில சூப்பரான வழிகள்....
பொதுாவக நாம் அனைவருக்குமே நீளமான மற்றும் ஆரோக்கியமான கூந்தல் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
ஆனால் இன்றைய காலத்தில் பலருக்கு முடி நீளமாக இருப்பதில்லை.
காலநிறை மாற்றம், முடி உதிர்வு, முடி வறட்சி, இரசாயன பொருட்கள் கலந்த கலவைகள் போன்றவற்றால் முடி நாளுக்கு நாள் முடி வழுவிழந்து உதிர்ந்து கொண்டிருக்கின்றது.
கூந்தலுக்கு உறுதியளிக்கும் பல்வேறு தயாரிப்புகளை நீங்கள் பயன்படுத்தினாலும், இயற்கை வைத்தியம் போன்ற எதுவும் இல்லை.
இது உங்கள் தலைமுடிக்கு எந்த பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாமல், ஆரோக்கியமாக பராமரிக்க உதவும். இதற்கு ஒரு சில இயற்கை பூக்கள் பெரிதும் உதவுகின்றது. தற்போது அவற்றை பார்ப்போம்.
- ரோஜா இதழ்களை உலர்த்தி, பொடியாக நறுக்கி, மிதமாக சூடாக்கிய தேங்காய் எண்ணெய், சில துளிகள் ரோஸ்மேரி எண்ணெய் மற்றும் சிறிது தேன் ஆகியவற்றைச் சேர்த்து, கலவையாக உருவாக்கி உங்கள் தலைமுடியில் பயன்படுத்தலாம்.
- மல்லிகை எண்ணெயைப் பயன்படுத்துவது உங்கள் முடியை ஈரப்பதமாகவும் சுத்தமாகவும் வைத்திருக்க உதவுகின்றது.
- முடி வளர்ச்சியை அதிகரிக்க ரோஸ்மேரி எண்ணெய்யை பயன்படுத்துவது நல்லது. இதனை எண்ணெய் வடிவத்திலும், உங்கள் ஷாம்பூவிலும் மற்றும் பலவற்றிலும் பயன்படுத்தலாம்
- 5-6 செம்பருத்தி பூக்களை அரைத்து ஹேர் மாஸ்க்காகப் பயன்படுத்துவது அல்லது இந்தப் பூக்களை உலர்த்தி, பொடி செய்து, தேங்காய் எண்ணெயில் சேர்க்கவும்.
- உங்கள் ஷாம்புவில் ஒரு துளி அல்லது இரண்டு பெர்கமோட் எண்ணெயைச் சேர்ப்பது அல்லது கேரியர் எண்ணெயில் சேர்த்து முடி மசாஜ் செய்யலாம்.
ALSO READ : சருமத்தை பொலிவாக்கும் 'பாலாடை மாஸ்க்'


Comments
Post a Comment