சருமத்தை பொலிவாக்கும் 'பாலாடை மாஸ்க்'

 முகத்தில் எந்த மாசுவும் சேர விடாமல் தடுத்து அழகை அதிகரிக்கும். சருமத்தில் உள்ள மாசு மருக்கள் நீங்கும்.


பெண்களின் சருமத்தை பாலாடையோடு ஒப்பிடுவது வழக்கம். அத்தகைய மென்மையான, பளபளக்கும் சருமத்தை பெற அவ்வப்போது முகத்துக்கு 'பாலாடை மாஸ்க்' உபயோகிக்கலாம். பாலில் இருக்கும் 'லாக்டிக் அமிலம்' சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்க உதவுகிறது. 

அதனால் அந்த இடத்தில் புதிய செல்கள் தோன்றி சருமம் எப்போதும் புதுப்பொலிவுடன் இருக்கும். பாலாடையை சருமத்தில் பூசுவதன் மூலம், திசுக்களில் தேங்கி இருக்கும் முகப்பருவை உருவாக்கும் கிருமிகள் நீங்கும். பாலாடையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து முகத்தில் தடவினால் 'பேஷியல்' செய்தது போன்ற பொலிவு கிடைக்கும்.

 பாலாடையை முகத்தில் நன்றாகத் தேய்த்து ஸ்கிரப் செய்வதன் மூலம் சருமத்தில் உள்ள மாசு மருக்கள் நீங்கும். வறண்ட சருமம் கொண்டவர்கள் பாலாடையை அவ்வப்போது தடவி வந்தால், சரும வறட்சி நீங்கி ஈரப்பதத்துடன் ஆரோக்கியமாக இருக்கும். 

எண்ணெய் தன்மைகொண்ட சருமத்தில் பாலாடையுடன் ரோஜா பன்னீர் அல்லது தயிர் கலந்து மாஸ்க் போன்று பயன்படுத்தலாம். பாலாடையை அப்படியே உபயோகிக்காமல், சிறிது நேரம் குளிர்பதனப் பெட்டியில் வைத்துப் பயன்படுத்தினால், சருமத்தில் பெரிய அளவில் இருக்கும் துவாரங்கள் சிறியதாகும். முகத்தில் எந்த மாசுவும் சேர விடாமல் தடுத்து அழகை அதிகரிக்கும்.

 பாலாடை பயன்படுத்தி தயாரிக்கும் பேஸ் மாஸ்க்குகள்: 

பாலாடை மற்றும் மஞ்சள்:

 1 டீஸ்பூன் பாலாடையுடன், 1 டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

 இந்தக் கலவையை முகம் முழுவதும் பூசி 10 நிமிடம் கழித்து தண்ணீரில் கழுவவும். 

பாலாடை மற்றும் கற்றாழை ஜெல்:

 2 டீஸ்பூன் பாலாடையுடன், 2 டீஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்றாகக் கலக்கவும். 

இதை முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து தண்ணீரில் கழுவவும்.

 பாலாடை மற்றும் தேன்: 

1 டீஸ்பூன் பாலாடையுடன், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

 இதை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவவும்.





Comments

Popular posts from this blog

டீ, காபியில் பட்டர் போட்டு குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

தலைகீழாய் தொங்கிய படி பியானோ வாசிக்கும் இளம்பெண்! மெய்சீர்க்க வைக்கும் காட்சி...

ருசியான நாவூறும் நண்டு குருமா செய்வது எப்படி? இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்....