முகப்பருவால் தொல்லையா? கவலை வேண்டாம்! சில எளிய வழிகள் இதோ....
இன்றைய காலத்தில் ஆண், பெண் என பலரும் சந்திக்கும் ஒரு முக்கிய சரும பிரச்சினை தான் முகப்பரு.
இதற்கு முக்கிய காரணமாக ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, போதிய சரும பராமரிப்பு இன்மை, தரமற்ற மற்றும் கெமிக்கல் கலந்த தயாரிப்புகளைப் பயன்படுத்துவது போன்றவையாகும்.
இதனை போக்க கண்ட கண்ட பொருட்களை தான் வாங்கிப்பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் இருக்கும் சில பொருட்களை கொண்டே சரி செய்ய முடியும்.
தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
* குப்பைமேனி இலையுடன் பூசுமஞ்சளை அரைத்து முகத்தில், பூசி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால், முகப்பரு மறைந்துவிடும்.
* முகப்பருவை கிள்ளுவதால் ஏற்படும் கரும்புள்ளிகளுக்கு, ஜாதிக்காய் ஒன்றை எடுத்து அதில் தேங்காய் பால் சிறிதளவு விட்டு, இரவில் படுக்கும்போது தடவிவர வேண்டும்.
* நுங்கு தோல்களை முகத்தில் தேய்த்து வந்தால், பருக்களின் தன்மை குறையத்துவங்கும்.
* விளக்கெண்ணெய் சிறிது வெதுவெதுப்பாக சூடேற்றி, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்த பின், குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
* பரு பிரச்னை அதிகம் உள்ளவர்கள் வாரத்திற்கு ஒரு முறை, ஆவி பிடிக்க வேண்டும்.
* வாழைப்பழத்தின் தோல், வெள்ளரிக்காய், பிரஷ் கற்றாழை , தக்காளி மற்றும் எலுமிச்சை சாறு, சிறிது தயிர், தேன் ஆகியவற்றை அரைத்து முகத்தில் பேக் போன்று போட்டு, நன்றாக காய்ந்தவுடன் முகத்தை கழுவினால், பருக்கள் நீங்கி முகம் பொலிவு பெறும்.
* மலச்சிக்கல், பொடுகு, மரபு, வயிற்றில் கழிவு சேர்தல் போன்ற காரணங்களாலும், பருக்கள் வரும் என்பதால், அதற்கு தீர்வு கொண்டால் பருக்கள் தானாக மறைந்துவிடும்.
ALSO READ : ஒரே மாதத்தில் உடல் எடையில் மாற்றம் தெரியணுமா? அப்போ தினமும் காலையில் இந்த ஒரு பானத்தை குடிச்சாலே போதும்....

Comments
Post a Comment