ஒரே மாதத்தில் உடல் எடையில் மாற்றம் தெரியணுமா? அப்போ தினமும் காலையில் இந்த ஒரு பானத்தை குடிச்சாலே போதும்....

 இன்றைய காலத்தில் பெரும்பாலான மக்கள் தங்களின் உடல் எடையைக் குறைக்க பல வழிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிலும் உடல் எடையைக் குறைப்பதில் டயட் மற்றும் உடற்பயிற்சி ஆகிய இரண்டும் முக்கிய பங்கை வகிக்கிறது. உடல் எடையை எவ்வித பக்கவிளைவுகளுமின்றி ஒரு சில இயற்கை பானங்கள் மூலம் குறைக்க முடியும். அதில் ஒருசில பானங்களும் உதவும்.

ஆனால் அதற்கு அந்த பானங்களை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். தற்போது அவை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.  


* எடையைக் குறைக்க நினைத்தால், 200 மிலி நீரில் 5 மிலி-10 மிலி ஆப்பிள் சீடர் வினிகரைக் கலந்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

* உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால், இரவு தூங்கும் முன் வெந்தய விதைகளை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். வேண்டுமானால், சுவைக்கு அந்நீரில் சிறிது தேன் சேர்த்துக் கொள்ளலாம்.

* சீரகம் மற்றும் சோம்பை இரவு தூங்கும் முன் நீரில் போட்டு ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்ததும் அந்நீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்க, உடல் எடையில் நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம்.

* இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் நீரில் 2 டீஸ்பூன் திரிபலா பொடியைப் போட்டு கலந்து இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

* காலையில் எழுந்ததும் மற்றும் இரவு தூங்கும் முன் பட்டை நீரைத் தயாரித்து, தேன் கலந்து குடித்து வாருங்கள். இதனால் உடல் எடையில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

* தொப்பையைக் குறைக்க நினைத்தால், காலையில் எழுந்ததும் காபி, டீ குடிப்பதற்கு பதிலாக, ஒரு டம்ளர் க்ரீன் டீயை வெறும் வயிற்றில் குடித்து வாருங்கள். இப்படி ஒரு மாதம் தொடர்ந்து குடித்து வந்தால், தொப்பை குறைவதை காணலாம்.



ALSO READ : குதிகால் வெடித்து கொண்டே போகிறதா? ஒரே வாரத்தில் மறைய இதை மட்டும் செய்யுங்க...

Comments