60 நொடிகளில் 1,140 கைத்தட்டல்கள் - வியக்க வைத்த இளைஞர் | வீடியோ...

 "நான் இதற்காக பயிற்சிகள் கூட எதுவும் எடுத்துக்கொள்ளவில்லை. இது எனக்கு இயற்கையாக வந்தது" என்கிறார் அவர்.


ஒரு நிமிடத்தில் 1,140 முறை கைத்தட்டி கின்னஸ் சாதனைப் படைத்த நபர் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த 20 வயது இளைஞர் டால்டன் மேயர் தான் இந்த சாதனைக்குச் சொந்தக்காரர். முந்தைய சாதனையான 1,103 கைத்தட்டல்களை விட 37 முறை அதிகமாக கைத்தட்டியுள்ளார் லோவா.

"நான் இதற்காக பயிற்சிகள் கூட எதுவும் எடுத்துக்கொள்ளவில்லை. இது எனக்கு இயற்கையாக வந்தது" என்கிறார் டால்டன். மேலும் விரைவாக கைத்தட்ட முந்தைய சாதனையாளரான பிஷப் உருவாக்கிய  wrist clapping technique (மணிக்கட்டு கைத்தட்டல் யுக்தி)- ஐ உபயோகித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த  wrist clapping technique என்பது ஒரு கையின் மணிக்கட்டு மற்றும் விரல்களைப் பயன்படுத்தி அடுத்த கையின் உள்ளங்கையை தட்டுவதாகும். ஆனால் இதனை வீடியோவில் பார்க்கும் போது எந்த அசைவையும் நம்மால் கவனிக்க முடியாது. அவ்வளவு வேகமாக அசைவுகள் இருக்கிறது.


ஒரு விநாடியில் 19 கைத்தட்டல்கள் வரைத் தட்டுவதை எண்ணுவது சவாலான ஒன்றாக இருந்திருக்கிறது. இதற்காக ஸ்லோமோஷன் கேமராக்களை பயன்படுத்தியிருக்கின்றனர். இந்த ஆடியோக்கள் தெளிவாக கிடைப்பதற்காகவும் மெனக்கெட்டுள்ளனர்.




Comments